திமுக எம்.எல்.ஏ., சைதை சுப்ரமணியம் தனது மனைவிக்கு செய்த தரமான சம்பவம்.!! நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டி சிட்கோ-வுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியம் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியம் அபகரித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில்,  சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், திமுக சைதாபேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியம் அவர்கள், அவரின் மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,  சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அமர்வு முன், அரசு இடத்தை மோசடி செய்து அபகரித்துள்ளதாகவும், அவரிடமிருந்து நிலத்தை மீட்க வேண்டும் என்றும் மனுதாரர் தாரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், மனுதாரர் பார்த்திபன் புகாரில் சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இந்த வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mla land abuse case chennai hc new order


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->