திமுக கூட்டணியில் அதிகாரபூர்வ தொகுதி பட்டியல்! அறிவித்தார் முக ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


வரும் 17 வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் வாக்கு நடைபெற உள்ளது. மேலும் அன்றே தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளில், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. 

இந்த மக்களவை மற்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட திமுக-காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து உள்ள 40 தொகுதிகளில்,  திமுகவிற்கு 20 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளும், மதிமுக 1+1 தொகுதிகளும், விசிக 2 தொகுதிகளும், இந்திய கம்னியூஸ்ட் 2 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் 2 தொகுதிகளும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1 தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி 1 தொகுதியும், இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டு கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தானது.

இந்நிலையில், திமுக உள்ளிட்ட கூட்டணி காட்சிகள் போட்டியிடப்போகும் அதிகாரபூர்வ தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி,.

திமுக போட்டியிடப்போகும் அந்த 20 தொகுதிகள்:

வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, பொள்ளாட்சி, நீலகிரி, வேலூர், அரக்கோணம், சேலம், திண்டுக்கல், காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர்,  தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், தென்காசி, ஸ்ரீபெரும்புதூர், மயிலாடுதுறை, கள்ளகுறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 

காங்கிரஸ் போட்டியிடப்போகும் அந்த 10 தொகுதிகள்:

புதுச்சேரி, கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி, திருவள்ளூர், கரூர், ஆரணி, விருதுநகர், கிருஷ்ணகிரி, திருச்சி  ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 
விசிக சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 

மார்க்சிஸ்ட் மதுரை,  கோவைஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 

இந்திய கம்யூனிஸ்ட் நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. 

முஸ்லீம் லீக் கட்சி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளது. 

ஐ.ஜே.கே பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட உள்ளது. 

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நாமக்கல் தொகுதியில் போட்டியிட உள்ளது. 
 
மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிட உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mega alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->