#BREAKING கேட்டது 3 தொகுதி.! திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு கிடைத்தது எத்தனை தொகுதிகள்.!! வெளியானது தகவல்.!! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதியும்ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, திமுக மார்க்சிஸ்ட் கட்சிக்கு இடையே என்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மதிமுக உயர்நிலை குழு கூட்டம்  கூடியது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மதிமுகவுக்கு தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனைகள் மேலும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில்,  மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்று மக்களவைத் தொகுதி ஒன்று மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 

இதற்கிடையே மதிமுகவின் உயர்மட்ட கூட்டம் நிறைவடைந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அண்ணா அறிவாலயம் வைகோ சென்று உள்ளார். இன்னும் சற்று நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MDMK ALLIANCE ISSUE


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->