அடுத்தடுத்து சிக்கலில் சிக்கி தவிக்கும் தினகரன் : டிடிவிக்கு எதிராக திமுக வீசிய குண்டு! - Seithipunal
Seithipunal


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் ரூ.28 லட்சத்தை விட கூடுதலாக செலவு செய்துள்ளதாக தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட மருதுகணேஷ் புகார் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அவரது தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலியாகவே இருந்து வந்தது.

ஏனெனில் ஜெ., மறைவுக்கு பின் அந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து அது நிருபிக்கப்பட்ட காரணத்தினால் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. 

அதனையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 -ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அந்த தேர்தலில் அதிமுகவின் சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேஷும், அதிமுகவில் இருந்து தனித்து விடப்பட்ட டி.டி.வி.தினகரன் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

இந்த முறையும் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இருப்பினும் குறிப்பிட்ட தேதியில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் நிறைய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

முதல்முறையாக எதிர்கட்சியான திமுக இந்த தேர்தலில் டெபாசிட்டை இழந்தது. தினகரனின் வெற்றிக்கு காரணம் அவர் அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யபட்டது தான் என்று பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டினார்.

மேலும் அவரது தரப்பில் இருந்து ரூ.20 டோக்கனாக கொடுத்து ஹவாலா முறையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இருப்பினும் அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை என்று தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார் டி.டி.வி.தினகரன்.     

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் ரூ.28 லட்சத்தை விட கூடுதலாக செலவு செய்துள்ளதாக தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட மருதுகணேஷ் புகார் அளித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டி.டி.வி.தினகரன், ரூ.28 லட்சத்தை விட கூடுதலாக செலவு செய்துள்ளதால் அவரை தேர்தல் ஆணையம் தகுதியிழப்பு செய்ய வேண்டும் என்று தி.மு.க வேட்பாளராக போட்டியிட்ட மருதுகணேஷ் தேர்தல் செலவின பார்வையாளர்களிடம் தற்போது புகார் அளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk give complaint against dinakaran


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->