என்ன செய்தார்கள்..? திமுகவில் எதுவெல்லாம் நடக்க கூடாது என்று நினைத்தனரோ, அது இன்று நடந்து விட்டது..!! - Seithipunal
Seithipunal


அறிஞர் அண்ணா 17.9.1949 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை துவங்கிய போது, கழகத்தின் கொள்கைகள் ஏறக்குறைய திராவிடர் கழகத்தின் கொள்கை போன்றதே.

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை காப்பாற்றுவது, கடவுள் மறுப்பு போன்ற கொள்கைகளைக் கடைப் பிடித்த அதே நேரத்தில், திராவிடர் கழகம் போல் இல்லாமல் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடுவது என்று தீர்மானமாக இருந்தது.

தேர்தலில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தால்தான் மாநிலத்தை சீரமைக்க முடியும் என்று உறுதியாக தி.மு.க. நம்பியது.

1962ல் நடைபெற்ற சீனப் போருக்குப் பிறகு “திராவிட நாடு” வேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிட்டு, இந்தியாவின் கரத்தைப் பலப்படுத்த மத்திய அரசுக்கு ஆதரவாக தி.மு.க. நின்றது.

அரசியலுக்குள் நுழைந்த நேரத்தில் அறிஞர் அண்ணா நாத்திகவாதியாக இருந்தாலும், அவரின் புகழ்பெற்ற “ஒன்றே குலம். ஒருவனே தேவன்” என்ற முழக்கம் அனைவரையும் கவர்ந்தது.

அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் மதித்துப் போற்றுவதற்கு ஏற்ற முழக்கமானது.

ஆனால் அண்ணாவிற்கு அடுத்து வந்திருக்கும் கலைஞர் நாத்திகத்தை கடைப்பிடிக்கிறார். உண்மையில் மதசார்பற்ற அமைப்பாக கழகம் திகழ்கிறது.

தமிழர்களின் கலாச்சாரம், மொழி ஆகியவற்றிற்கு பாதுகாப்புக் கேடயமாக தி.மு.க. விளங்குகிறது என்று அதன் கட்சி கொள்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.

ஆனால் இன்றோ கட்சி கொள்கை முழுவதும் வழக்கொழிந்து இப்போது அதிமுகவை போலவே அலங்கோலமாக திகழ்கிறது.

பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவதாக கூறி தொடர்ந்து வந்த நடைமுறை தற்போது ஆன்மீக வழிக்கு மாறி விட்டது.

நாங்கள் நாத்திகம் என்று விடாப்பிடியாக இருந்தவர்கள் கூட, தங்களையே அறியாமல் சடங்குகள் சம்பிரதாயங்களில் இறங்கி விட்டனர்.

அந்த வகையில் தான் தீபாவளி தினத்தன்றும் இதே போல ஒரு வினோதம் நடந்துள்ளது. பெரியாரின் திராவிட கொள்கை படி, தீபாவளி திமுகவினரால் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

அப்படியிருக்கையில் அவரின் படத்தை போட்டே தீபாவளி கொண்டாட்ட வாழ்த்து போஸ்டர் அடித்துள்ளது நகைப்பிற்குள்ளாக்கி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In order to safeguard the interests of Dravidians, Arignar Anna established the DMK party on 17th September 1949


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->