அழைப்பு விடுத்த ஸ்டாலின்.. ஒன்று கூடும் கட்சிகள்... மீண்டும் இழுக்கும் திமுக.. கூட்டணி குறித்த இறுதியான தகவல்.! - Seithipunal
Seithipunal


நேற்று இரவு அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து இன்று கூட்டணி குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

மீதமுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு  தொகுதி பங்கீடு செய்ய தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

அந்த கட்சிகளுடன் இன்று 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குழுவினருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.  ‌

அதனை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்ற ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ‌

பொருளாளர் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு,  ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோருடன் ஸ்டாலின்  அங்கு சிறிது நேரம் அமர்ந்து ஆலோசனை செய்துவிட்டு புறப்பட்டு சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK-Discussion-with-MDMK-Marxist-And-Viduthali-Siruthai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->