திமுக-காங்கிரஸில் குழப்பமா? நேரம் குறித்த தலைவர்.!! அதிகாரபூர்வ அறிவிப்பு.!! தயாராகும் உடன்பிறப்புகள்.!! - Seithipunal
Seithipunal


வரும் நாடாளுமன்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி என்ற சிக்கல் நிலவி வருகிறது, தமிழகத்தை பொறுத்தவரை திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி வைக்கலாம் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில், பாமக யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்ற மாபெரும் குழப்பம் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவியது.

திமுக தரப்பில் இருந்தும், காங்கிரஸ் தரப்பில் இருந்தும் பாமகவிடம் கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. அதேபோல் அதிமுக தரப்பில் இருந்தும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதனால், தமிழகத்தில் கூட்டணி அமைப்பதில் கடும் சிக்கல் நிலவியது.

இந்த நிலையில் தான் நேற்று அதிமுக-பாஜக-பாமக கூட்டணி உறுதியாகி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை அதிமுக 21, பாஜக 5, பாமக 7+1 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தொகுதி உடன்பாடு நடந்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானது முதல் திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என்று தான் அவரின் பேச்சு உணர்த்தியுள்ளது. இதே திமுக பாமாவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது என்பதை மறந்த முக ஸ்டாலின் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். 

இதற்கிடையே திமுக கூட்டணியில் இருந்து தோழமை காட்சிகள் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் திமுக கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் இது குறித்து, திமுகவின் மகளிரணி தலைவி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ''திமுக கூட்டணியில் எந்தவித குளறுபடியும் இல்லை, குழப்பமும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார். மேலும், ''திமுக - காங். தொகுதி பங்கீடு குறித்து மாலை 7 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார். என்றும், இன்று மாலை காங். சார்பில் முகுல் வாஸ்னிக், வேணுகோபால் ஆகியோர் ஸ்டாலினை சந்திக்க உள்ளனர், அதன் பிறகு அறிவிப்பு வெளியாகும் கனி மொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk congress alliance time detail


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->