வாரிசு என்றவர்களுக்குக்கு பட்டியல் மூலம் பதிலடி கொடுத்த முக ஸ்டாலின்! காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம்!  - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் வாரிசுகள் தான் போட்டியிடுகிறர்கள் எனவும், தொண்டர்களுக்கோ, இரண்டாம் கட்ட தலைவர்களுக்கோ இடம் அளிக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பு உருவாகியது. 

மேலும் திமுக தொகுதி பங்கீட்டில் பெற்றிருப்பது 20 தொகுதிகள் தான். ஆனால் அவற்றில் 50 சதவீதத்தை கட்சியின் வாரிசுகளுக்கே கொடுக்க முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, இது என்ன ஜனநாயக கட்சியா? குறுநில மன்னர்கள் கட்சியா? என்றும் திமுகவினர் கொந்தளித்தனர். 

இந்நிலையில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட முக ஸ்டாலின் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளார்.  

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கலாநிதி (ஆற்காடு வீராசாமியின் மகன்)

மத்திய சென்னை-  தயாநிதி மாறன் (முரசொலி மாறன் மகன்)

தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் (தங்கபாண்டியன் மகள், தங்கம் தென்னரசு சகோதரி)

வேலூர் - கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)

கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி (பொன்முடி மகன்)

தூத்துக்குடி – கனிமொழி (கலைஞர் துணைவி மகள்)

ஆக மொத்தம் 6 தொகுதிகளில் மட்டுமே திமுகவின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. 8 வாரிசுகள், 10 வாரிசுகள் என்றவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் 6 தொகுதிகளில் தான் வாரிசுகள் போட்டியிடுகிறார்கள். சீட்டை எதிர்பார்த்து காத்திருந்த கடலூர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk candidates details


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->