தேர்தல் இரத்து எதிரொலி..! திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளரின் திடுக்கிடும் பேட்டி.? போட்டுடைக்கப்பட்ட இரகசியம்.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து  திருவாரூர் தொகுதிக்கான வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க போன்ற கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில்,திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

அதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. மேலும் தேர்தல் பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறும் தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பேட்டியளித்துள்ள திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், தேர்தல் ரத்தாகும் என்பது முன்கூட்டியே எங்களுக்கு தெரியும். அதிமுக, பாஜகவின் செயல்பாடுகளை வைத்தே இதனை உணர்ந்து கொண்டோம்.

எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து கொண்டிருந்த பொழுது, அதிமுகவும், பாஜகவும் வேட்பாளர்களை அறிவிக்காமல் தாமதப்படுத்தி வரும் போதே சந்தேகம் வந்தது. இப்போது அது உறுதியாகியுள்ளது.

தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி தான் இயங்குகிரதா என்ற சந்தேகம் எழுகிறது' என்று கூறியுள்ளார். முன்னதாக ஸ்டாலினும் இந்த நேரத்தில் திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் நடப்பது சரியாக அமையாது என்றுப் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk candidate speech about bi-election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->