ஸ்டாலினை நோக்கி விரைந்த திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளர் - வதந்திகளுக்கு மத்தியில் சற்று முன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்த நிலையில், திமுக சார்பில் அந்த தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுபவர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் மறைவை அடுத்து வருகிற 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

அதில், வருகிற ஜனவரி 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை ஜனவரி 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுவை ஜனவரி 14 க்குள் திரும்பப்பெறலாம்.

இதைத்தொடர்ந்து, ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவும், ஜனவரி 31ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து இடைத்தேர்தல் குறித்து திமுக, அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள், ஆலோசனை செய்து வருகிறது.

திருவாரூரில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என திமுக முன்னணி தலைவர்கள் வலியுறுத்து வருவதாகவும், அதனால் இடைத்தேர்தலில் முக ஸ்டாலின் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவி வந்தது.

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் தேர்வு செய்யும் நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.

திமுக சார்பில் போட்டியிட நேற்று பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக 20க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அதே போல திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பாக 40 பேரும், உதயநிதி ஸ்டாலின் போட்டியிட 2 விருப்ப மனுக்களும்  தாக்கல் செய்யப்பட்டது.

விருப்பமனு மீதான பரிசீலனை திமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.  நேர்காணல் முடிவில்,திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளர் யார் என்று  திமுக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன்திமுக வேட்பாளராக நிற்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியான நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் முகநூல் பக்கத்தில் இது குறித்த அதிகாரபூர்வ ஆணை வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து திருவாரூர் தொகுதி திமுக  வேட்பாளர் பூண்டி கலைவாணன் ஸ்டாலினை  நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk candidate for by poll election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->