நாளை திமுக வேட்பாளர் பட்டியல்!  ராகுகாலம் முடிந்து, தனயோக வேளையில் வெளியிடும் முக ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தை,  இரண்டு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட்,   மார்க்சிஸ்ட் கட்சிக்கு  தலா இரண்டு தொகுதிகளும்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும், கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும், ஐஜேகே-வுக்கு ஒரு தொகுதியும் மதிமுகவிற்கு 1 மக்களைவை, 1 மாநிலங்களவை தொகுதியும், வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது.

இதற்கிடையே நேற்று வெள்ளிக்கிழமை 10 . 30 முதல் 12 மணி வரை ராகுகாலம் முடிந்த பிறகு, 12 . 36 மணி அளவில் விஷயோக வேளை முடிந்து அமிர்த யோகத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக போட்டிடப்போகும் தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடப்போகும் தொகுதிகளின் பட்டியலை நேற்று மதியம் 1 மணிக்கு வெளியிட்டார். 

அதன்படி, திமுக போட்டியிடும் தொகுதிகள் என, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, பொள்ளாட்சி, நீலகிரி, வேலூர், அரக்கோணம், சேலம், திண்டுக்கல், காஞ்சிபுரம், நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர்,  தருமபுரி, திருவண்ணாமலை, கடலூர், தென்காசி, ஸ்ரீபெரும்புதூர், மயிலாடுதுறை, கள்ளகுறிச்சி ஆகிய தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த தொகுதிகளின் வேட்பாளர்களை நாளை மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகுகாலம் நிறைவு பெற்றபின் 6.33 மணிக்கு விஷயாக வேளை முடிந்து, தனயோக நேரம் தொடங்கிய பிறகு முக ஸ்டாலின் அறிவிக்க  உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அப்போதே 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. 

திமுக நேரம், காலம் பார்க்காத பகுத்தறிவு கொள்கை கொண்ட கட்சி சொன்னால் நம்புங்க பாஸ்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk candidate details will declare by mk stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->