மரண அடி நிச்சயம்.! கத்தி கதறும் முக ஸ்டாலின்.!! மொத்த தமிழகமும் உச்சகட்ட கொந்தளிப்பில்.!! - Seithipunal
Seithipunal


திராவிடம் இந்துக்களுக்கு மட்டும் எதிரானவர்கள் என்ற உண்மையை தமிழகத்தில் வாழும் பெரும்பான்மை இன மக்களான இந்துக்கள் கடந்த 20 வருடங்களில் உணர்ந்து உள்ளனர். 

கடந்த 20 வருடங்களில் இந்துக்களை மட்டும் தொடர்ந்து இழிவுபடுத்தி, திமுக தலைவர்கள், திராவிட கழகத்தின் தலைவர்களின் பேச்சும், செயலும் வெட்ட வெளிச்சமாக தமிழக மக்களுக்கு தெரிந்து விட்டது. 

இவர்கள் ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் மூட நம்பிக்கை அனைத்து மதத்திலும் தன் உள்ளது. இந்து மத்தில் மட்டும் உள்ள மூட பழக்கத்தை ஒழிக்க வந்தவர்கள் எனில், நீங்கள், திராவிடர்கள் அல்லவே, இந்துமத மத சீர்திருத்தவாதிகள் மட்டும் தானே. இதனை கேட்டால், நீங்கள் மத கலவரத்தை தூண்ட நினைக்கிருக்கீர்கள் என்று சொல்வீர்கள்.

ஒரு இஸ்லாமிய மதத்தில் மூட பழக்கங்கள் அறவே கிடையாதா? கிருஸ்துவ மதத்தில் இல்லாத மூட பழக்கங்கலா?, அது என்ன திராவிடர்கள் குறிப்பாக திமுக கிருஸ்துவ, இஸ்லாமிய மதங்களை ஆதரித்தும், ஒரு வார்த்தை கூட அவர்களின் மனம் நோகாமல் பேசி வரும் இவர்கள்.இந்து கடவுளை மட்டும் சர்வ சாதாரணமாக விமர்சனம் செய்து விடுகின்றனர் என்ற கேள்வி தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் எழ ஆரம்பித்துவிட்டது.

அதன் வெளிப்பாடே இன்று திமுக தலைவர் நான் இந்துக்களுக்கு எதிரவணன் இல்லை என்று கதற வைத்துள்ளது. ஏன் இஸ்லாமிய, கிருஸ்துவ பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதும், அழையா விருந்தாளியாக மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் என்று இருப்பவர்கள், இந்துக்களின் பண்டிகையான பொங்கல் முதல் அனைத்து இந்து கடவுள்களின் பண்டிகையும் புறக்கணித்தும், அதன் பேரை கூட உச்சரிக்க அருவறுப்பானவர்கள் போல் விடுமுறை தின கொண்டாட்டம் என்று தம்பட்டம் அடிக்கின்றனர்.

இதே திமுக ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுவதும், இந்துக்கள் பண்டிகையான தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, சித்திரை வருட பிறப்பிற்கு வாழ்த்து சொல்லாததும் காலம் காலமாக பின்பற்றி வருகிறது. ஆனால் இவர்களின் கபட நாடகம் இனி செல்லுபடியாகாது. தமிழக மக்கள் விழித்து கொண்டனர்.

நெற்றியில் குங்குமத்தை அழித்த கனிமொழி இன்று குங்கும பொட்டோடு வாக்கு சேகரிக்க புறப்பட்டுவிட்டார். இந்துக்கள் என்ற வார்த்தையை அசிங்கம் என்று நேற்று வரை கூறிவந்த ஒரு திராவிட தலைவர், இன்று நான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை என்று கூறுகிறார். மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர். ஒருவர், நான் இந்து மதத்துக்கு எதிரி இல்லை என்று பொதுவெளியில் தம்பட்டம் அடிக்கிறார் என்றால், அவர் இந்த இந்து மதத்திற்கு எவ்வளவு எதிராக நடந்து இருக்க வேண்டும் என்று நீங்களே யோசியுங்கள்.

திமுகவின் கொள்கைப்படி, தாலி ஒரு மூட நம்பிக்கை, அதற்காக திமுகவில் உள்ள இந்துக்கள் யாரும் தங்கள் மனைவிக்கு தாலி கட்டாமல் தான் குடும்பம் நடத்துகிறார்களா என்ன?.. குங்குமம் இடாமல் உள்ளார்களா? ஆக தன் சொந்த கட்சியில் உள்ளவர்கள் பின்பற்றும் ஒரு முறையை, சுயமரியாதைக்கு பங்கம் வகிக்க மாட்டோம் என்று பொங்கும் திராவிடம், இவ்வளவு நாள் அசிங்கப்படுத்தியுள்ளது.

திமுகவின் குட்டு முதலில் எங்கு உடைபட்டது என்று தெரியுமா உங்களுக்கு.. ஒரு மேடையில் தாலியை அறுத்துவிட்டு, இன்னொரு மேடையில் தாலி எடுத்துக்கொடுத்த போதே திமுகவின் முகத்திரை நாறு நாராக கிழித்து தொங்கவிடப்பட்டது. இதே திமுக தலைவர் முக ஸ்டாலின் ஸ்ரீ ரங்கத்தில் இட்ட குங்குமத்தை உடனே அழித்த தைரியம், தேவர் ஜெயந்தியின் போது அங்குள்ளவர்கள் இட்ட போது.. கமுக்கமாக் காரில் ஏறி அமர்ந்து அந்த இடத்தை விட்டு காலிசெய்தபின் அழித்த மர்மம் என்னமோ? கூடியிருந்த தேவர் சமூக மக்கள் முன் அழிக்க திராணி உண்டா என்று இன்று இணையத்தில் மக்கள், ஸ்டாலினை கேள்வி கேக்க ஆரம்பித்து விட்டனர்.

சரி அப்படி என்ன தான் செய்தது திமுக, இந்த இந்து மதத்திற்கு.. நன்றாக யோசித்து பாருங்கள்.. தேர் விட்டேன்.. திகட்டாத பால் வார்த்தேன் என்று எப்போதும் போல சின்னஞ்சிறிய கைகாரியங்களை காண்பிப்பார்கள் திமுகவினர். பார்ப்பனியத்திற்கு எதிரானவர்கள் என்றால், இன்று பார்ப்பனியத்தை பின்பற்றுவார்கள் சுய மரியாதையை யார் காப்பது. மன்னிக்கவும், கல்லை கும்மிடுகிறாயா உனக்கு பகுத்தறிவு உண்டா என்று கேட்ட பெரியார்? ஏன் உருவமே இல்லாத வழிபாட்டை நடத்தும் இஸ்லாமியர்களுக்கும், இறந்த ஒரு மனிதன் வருடா வருடம் இறப்பதும், பின் மூன்றாவது நாளில் உயிர்த்தெழுவதுமாக கொண்டாடும் கிருஸ்துவர்களிடம் பார்த்து, இதற்கு பேர் பகுத்தறிவா என்று கேக்க பெரியருக்கோ.. கீ வீரமணிக்கோ.. வைரமுத்துவுக்கோ.. கலைஞர் கருணாநிதிக்கோ.. முக ஸ்டாலினுக்கோ திராணி உண்டா? 

ஒன்றுமே வேணடும் இதே கீ வீரமணி, திருமாவளவன், கேரளாவில் சென்று ஆணும் ஆணும் புணர்ந்து பிறந்த ஒருவனை (சிவனும்-விஷ்ணுவும் புணர்ந்து, ஐயப்பன் பிறந்ததாக) கடவுளாக வழிபடிக்கிறீர்களே உங்களுக்கு பகுத்தறிவு இருக்கா என்று கேட்டுவிட்டு தமிழகம் வர திராணி இருக்கா..

இனியும் இந்த மண்ணில் நம் நாடகம் எடுபடாது என்பதை உணர்ந்த முக ஸ்டாலின் இன்று கதறுகிறார் நன் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை என்று. நன்கு ஒரு விஷியத்தை சிந்தித்து பாருங்கள், தமிழகத்தில் ஒரு ஊடகம் கூட ஸ்டாலினை கேள்வி கேக்க முடியாது. அதற்கான கரணம் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஏ.என்.ஐ (ANI) செய்தி நிறுவனர் முக ஸ்டாலினை பார்த்து கேட்கிறார். ''இந்து கடவுளான கிருஷ்ணரை கீ வீரமணி அவமதித்து கீழ்த்தரமாக பேசியுள்ளார். நீங்கள் இதற்கு மௌனமாக இருப்பதற்கு, அவரின் கருத்தை நீங்கள் வரவேற்பதாக எடுத்துக்கொள்ளலாமா?" என்று.. கேட்ட நிருபர் தமிழகத்தை சேர்ந்த ஊடகத்தை சேர்ந்தவராக இருந்தால், அந்த நிருபர் இன்று எந்த நிலைக்கு ஆளாகுவார் என்றே தெரியாது. முதலில் ஸ்டாலினை கேள்வி கேட்க ஒரு நடுநிலையான பத்திரிகையையோ, ஊடகமோ இல்லை. பின்பு எங்கு கேள்வி கேட்க..

சரி விஷியத்திற்கு வருவோம், அந்த ANI நிருபரின் கேள்விக்கு விழி பிதுங்கிய ஸ்டாலின் வாயில் இருந்து முதல் முறையாக, தாய் கழகமான திராவிட கழகத்தகத்தின் தலைவர் கீ வீரமணிக்கு கண்டனத்தை தெரிவிக்கிறார். இதில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள். இங்கு இந்துக்களின் நிலை எப்படி உள்ளது என்று. 

சுயமரியாதை பேசும் திமுக, முதலில் தன் கட்சியில் உள்ள இந்துக்களுக்கு சுயமரியாதைக்கு பங்கம் வராமல் நடந்து கொண்டு உள்ளதா? ஒரு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்னதுண்டா? சிலைகளை கல் என்றும், குங்குமம் ஈடுபவன் மூடன் என்றும் தமிழக மக்களின் சுயமரியாதை அசிங்கப்படுத்தி அதில் அரசியல் செய்து வந்துள்ளீர்கள். மாற்று மதத்தை கேள்வி கேக்க திராணி இல்லை என்றால், இந்துக்கள் அனைவரும் நோஞ்சான்கள் என்று எண்ணிவிட்டீர்களோ? தமிழக மக்கள் விழித்து கொண்டு விட்டனர்.

இப்படியாக திக-வின் கொள்கைகளை முழுமையாக பின்பற்றி வரும் திமுகவிற்கு, தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் பேச தொடங்கிவிட்டனர். இணையத்தில் கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். மேலும், இந்த தேர்தலில் மரண அடி என்ற உளவுத்துறையின் ரிப்போர்ட் ஸ்டாலினை திக்கு முக்காட வைத்துள்ளது. ஸ்டாலின் இனி என்ன கதறி கத்தினாலும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்ற உண்மையை மறைக்க முடியாது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK AND DK DRAMA OVER


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->