திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி! தொகுதியை ஒதுக்கினார் முக ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் அதன் பிறகு திமுகவின் தோழமை கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையை திமுக நேற்று முதல் நடத்தி வருகிறது. 

இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த கட்சிகளுடனும் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிகிறது. ஏனெனில் மதிமுக 4 தொகுதிகளையும், விசிக 3 தொகுதிகளையும், இந்திய கம்யூனிஸ்ட் 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 என மொத்தம் 13 தொகுதிகளை கேட்டு முக ஸ்டாலினை அதிரவைத்துள்ளனர். 

இது மட்டும் இல்லாமல் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் கட்சி என தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த கட்சிகளுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கினாலும் மீதி எத்தனை தொகுதிகள் இருக்கும் அது தான் திமுகவிற்கு என்றால் கேட்கவே மலைக்க வைக்கிறது அல்லவா! 

அதனால் தான் திமுக தொகுதி உடன்படிக்கையை பார்த்து நிதானமாக செய்து வருகிறது. மேலே தொகுதிகளை கேட்ட கட்சிகளை ஒருபுறம் வைத்துவிட்டு முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்கி ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்கள். அக்கட்சி தலைவர் காதர் மொய்தீன் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெற பாடுபடுவோம் என அறிவித்துள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk allotted one seat to Muslim league


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->