சிதறுகிறதா திமுக கூட்டணி.! குட்டையை குழப்பிய அழகிரி-துரைமுருகன்.!! குழப்பத்தில் தோழமை கட்சி எழுப்பிய சந்தேக கேள்வி.!!! - Seithipunal
Seithipunal


வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உறுதியாகியுள்ளது. அதே சமயத்தில் தோழமை கட்சிகளான கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மேலும் சில சிறிய கட்சிகள் நட்பு ரீதியாக உள்ளதாக, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித் வருகிறார். மேலும், தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் கூட்டணிக்கான இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் துரைமுருகன் தெரிவித்து வருகிறார்.

இதற்கிடையே காங்கிரஸ் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கே எஸ் அழகிரி புதிய தலைவராக பொறுப்பேற்று உள்ளார். பொறுப்பேற்றவுடன் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணி சம்பந்தமான கலந்துரையாடல்களை நடத்தி உள்ளார்.

மேலும் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் காங்கிரஸ் கூட்டணியில் கமலஹாசன் இணைய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்து இருந்தார். இந்த விவகாரம் பல்வேறு குழப்பங்களை உண்டாக்கியது. அதாவது ஊழல் கறைபடிந்த திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறிய கமலஹாசன் அவர்களை, திராவிட கட்சியுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரே கூட்டணிக்கு அழைப்பது அரசியல் கேலிக்கூத்தாக பார்க்கப்பட்டது.

அதேபோல், நட்பு ரீதியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அடிக்கடி திமுக தலைவரை சந்தித்து கூட்டணியை உறுதிசெய்ய முயற்சி செய்து வருகிறார். மேலும், அவர் அளிக்கும் பேட்டிகளில் கூட, திமுகவுடன் நிச்சயம் நாங்கள் கூட்டணி வைப்போம், எங்கள் கூட்டணி உறுதி செய்யப்படும் என்று தெரிவித்து வருகிறார்.

அதே சமயத்தில் அவ்வப்போது அதிமுக-பாஜக கூட்டணி குறித்து, அதிமுகவின் நலன் விரும்பிய போல் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் அது அதிமுகவிற்கு பெரும் பாதகமாக அமையும் என்றும் அதிமுகவிற்காக கரிசனம் படவும் செய்துவருகிறார். தற்போதைய சூழ்நிலையில் திமுக தோழமை கட்சிகளாக உள்ள காட்சிகளில், மதிமுக மட்டுமே சீட்டு கிடைக்காவிட்டாலும் திமுகவுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் உள்ளது.

மற்ற தோழமை கட்சிகளின் நிலை கேள்வி குறியாக தான் உள்ளது. ஆம் இதற்கு காரணம் திமுக பொருளாளர் துரைமுருகன் அடிக்கடி கூறும் அந்த வார்த்தை தான். தொகுதி பங்கீடு நடந்தால் தான் கூட்டணி கட்சி. அதுவரை தோழமை கட்சிதான் என்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டி திருமா, வைகோவை பதற வைத்தது. 

சமீபத்தில் கூட துரைமுருகன் அவர்கள் அளித்துள்ள பேட்டியில், ''தாலி காட்டினாள் தான் பொண்டாட்டி'' என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். தோழமை கட்சிகள் நாளை அதிக தொகுதிகள் கேட்டால் என்ன செய்வது என்று தற்போதே மிரட்டல் விடுகிறார் துறை முருகன் என்று நமக்கே தோன்றும் போது, திமுகவின் தோழமை கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அவர்களுக்கு தோன்றாதா என்ன? 

சரமாரியாக தனது கேள்வி கணைகளை தொடுத்து பேட்டியளித்துள்ளார், அதில், ''திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இதுவரை அதிகாரப்பூர்வமாக நடக்கவில்லை. 9 கட்சிகளுமே திமுக கூட்டணியில் தான் உள்ளன, ஆனால் கூட்டணி தொடர்பாக சில கருத்துக்களை துரைமுருகன் ஏன் சொல்கிறார் என்றே புரியவில்லை'' என்று கூறிய முத்தரசன். திமுக, அதிமுகவோடு கூட்டணி கிடையாது என கமல் அறிவித்த பிறகும் தமிழக காங். தலைவர் அழகிரி ஏன் அழைப்பு விடுத்தார் என தெரியவில்லை என்றும் தனது சந்தேக கேள்வியை முத்தரசன் முன்வைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK ALLIANCE ISSUE


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->