தினகரன் எடுத்த அதிரடி முடிவு.! மூன்றாவது அணியா.? இல்லை ஜெயலலிதாவின் வழியா.?!! பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக பாமக கூட்டணி உறுதியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டணியில் தேமுதிக, தமாக, பதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி களும் இணைய உள்ளது. இந்த கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து  பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அதிமுக தலைமையிலான இந்த மெகா கூட்டணியில் அதிமுக 21, பாஜக 5, பாமக 7 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதேபோல் திமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே உறுதியாகியுள்ளது. 

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எட்டு கட்சிகள் இடம் பெற வாய்ப்புள்ளது. அதில், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

இதேபோல், அதிமுக-பாஜக, திமுக-காங்கிரஸ் இல்லாதா கூட்டணி ஒன்று தினகரன் தலைமையில் அமையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தினகரன் எந்த கட்சிகளுடனும் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு உடன்படுவதாக தெரியவில்லை. இதனால், தினகரன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அளித்துள்ள பேட்டியில் அதிமுக பாமக கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அவர், எடப்பாடியையும், ஓ.பன்னீர் செல்வத்தையும் ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தினகரன், ''அ.ம.மு.க. கூட்டணி தொடர்பாக சில மாநில கட்சிகளுடன் பேசி வருகிறேன். கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் 95 % பேர் எங்களுடன் தான் உள்ளனர். அடுத்த பிரதமரை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DINAKARAN NEXT MOVE


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->