தினகரன் கூட்டணியில் இரண்டு கட்சிகள்.! தொகுதிகள் ஒதுக்கீடு செய்து அறிவித்தார் தினகரன்.!! - Seithipunal
Seithipunal


வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுக, திமுக கூட்டணி அமைக்க தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. எப்போதும் போல இந்த தேர்தலிலும் அதிமுக-திமுக இடையே பலத்த போட்டி இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுவரை உறுதியாகியுள்ள கூட்டணி என்று பார்த்தால், அதிமுக தலைமையில், பாஜக, பாமக, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மேக கூட்டணி அமைந்துள்ளது. மேலும் இந்த கூட்டணியில் தேமுதிக, தமாக இணைய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி தொகுதி பங்கீடு முடிந்து கூட்டணி உறுதியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டணியில், மதிமுக, இந்திய கம்னியூஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், 38 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்தார். மேலும் அவர் அளித்துள்ள பேட்டியில், ''வரும் பாராளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் போட்டியிடலாம் என்று நினைக்கிறோம். 2 கட்சிகளுடன் கூட்டணி பேசிக்கொண்டு இருக்கிறோம். வருகிற 28-ந்தேதி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளோம்'' என்று தினகரன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DINAKARAN ALLIANCE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->