கஜா புயலை வைத்து ஸ்டாலின் செய்யும் அரசியல்..? முக்கி முழுகச்செய்யும் ஓ.பி.எஸ் - பட்டென்று உடைத்த இரகசியம்.! - Seithipunal
Seithipunal


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் புயல் சேதங்களை பார்வையிட்டு வருகிறார். நேற்று தஞ்சாவூரில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார்.

இதனை தொடர்ந்து கஜா புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சுமார் 1.1 கோடி மதிப்பிலான உதவிதொகையினை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கஜா புயலின் தாக்கம் பன்னிரெண்டு மாவட்டங்களில் காணப்படுகிறது. மிதமான தாக்கம், மிக கடுமையான தாக்கம் என்று பல வகையில் சேதம் ஏற்பட்டுள்ளது.

சுனாமி வந்த பிறகு தானே, வர்தா புயல், ஒக்கி புயல் போன்றவற்றை சந்தித்து விட்டோம். அத்தனை பேரிடர்களையும் எதிர்கொண்டு எந்த வித சுவடும் தெரியாத அளவிற்கு அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாற்றியுள்ளோம்.

ஜெயலலிதா இருக்கும் பொழுது இதற்கு முன்னர் வந்த இயற்கை சீற்றங்களை எப்படி எதிர்கொண்டோமோ, அதை விட சிறப்பாக போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

புயல் எதிர்கொண்டு சில நாட்களிலேயே தஞ்சை மாவட்டத்திற்கு மின்சாரம் வழங்கும் முயற்சியை துரித கதியில் மேற்கொண்டு விட்டோம்.

புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் அரசின் தரப்பில் இருந்து உரிய நிவாரணம் வழங்கப்படும்.

கஜா புயல் தாக்கியதை வைத்து இந்த நேரத்திலும்  ஸ்டாலின் அரசியல் செய்கிறார். வெறும் வாய்ஜாலம் மட்டுமே மக்களை காக்க போதாது. அதனை செயலிலும் காட்ட வேண்டும்.

நாங்கள் களத்தில் கடமை உணர்வு தவறாது, அர்பணிப்புடன் பணியாற்றி வருகிறோம். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இல்லை தமிழகம் முழுவதிலும் சாப்பாட்டுக்கு வழியில்லை என்ற நிலைமை மாற்றப்பட்டுள்ளது. அதற்கான தீவிர முயற்சியை அரசு எடுத்து வருகிறது ' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deputy CM OPS slams DMK Chief Stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->