அதிமுக கூட்டணியில் சைக்கிள் சின்னம்! எந்த தொகுதிக்கு தெரியுமா?! - Seithipunal
Seithipunal


17 வது மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக, அமமுக தலைமைகளில் அமைந்து உள்ள கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

நேற்று அதிமுக போட்டியிட உள்ள 20 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் கூட்டணி கட்சியான பாமக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. மேலும் திமுகவும் 20 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

நேற்று காலை அமமுகவும், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இன்று அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதேபோல் தேமுதிகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள தஞ்சை தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை தொகுதியில் தமாகா வேட்பாளர் நடராஜன் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் அளித்திருந்ததது. இந்நிலையில் அக்கட்சி கேட்ட சைக்கிள் சின்னத்தினை வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் சைக்கிள் சின்னம் களமிறங்குகிறது.  

தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்று ரோட்டில் போகும் சைக்கிள்களை பறிமுதல் செய்யாமல் இருந்தால் சரி தான்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cycle symbol for tmc party in lok sabha election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->