யார் இந்த கோவிந்தசாமி? பாமகவில் சீட் கிடைத்தது எப்படி! வெளியான முழு பின்னணி!  - Seithipunal
Seithipunal


கடந்த 40 ஆண்டுகளாக கடலூர் மாவட்ட மக்களுக்கு மருத்துவ சேவையும், பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கான போராட்டங்களையும், தீர்வுகளையும் கொடுக்கும் சமூக சேவகர் தான் டாக்டர் ஆர்.ஜி என்றழைக்கப்படும் இரா.கோவிந்தசாமி என்ற அறிமுகத்துடன் சொல்ல தொடங்கினார்கள் அப்பகுதி மக்கள். அவர் குறித்து அப்பகுதி மக்கள் மேலும் கூறியதாவது, 

வறுமையான குடும்பமும்,  சவாலான கல்வியும் :

இவர் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள விளக்கப்பாடி என்னும் கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் இராமசாமி - சந்திராவர்ணம் தம்பதிகளுக்கு மூன்றாவது (இளைய) மகனாக மாட்டு கொட்டகையில் பிறந்தார்.

இவரது தாய் மாடுகளை வளர்த்து பால், தயிர், சாண வரட்டி விற்றும், தந்தை ரூ 25 ஊதியத்தில் தினக்கூலியாக வேலை செய்தும் குடும்பத்தை நடத்தினர்.

5 ஆம் வகுப்பு வரை சொந்த கிராமத்திலுள்ள திண்ணை பள்ளிக்கூடத்தில் படித்தவரால், வறுமையின் காரணமாக படிப்பை தொடர முடியாமல், 1 வருடம் தன் தாய்க்கு உதவியாக மாடு மேய்த்தார். மீண்டும் அடம் பிடித்து குடும்ப வறுமையை எண்ணி தீவிரமாக பள்ளி படிப்பை முடித்தவர், நல்ல மதிப்பெண்கள் பெற்று 1969 ல் ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம்(MBBS) படித்தார். தொடர்ந்து DA, MD உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளையும் முடித்தார்.

அப்பகுதி மக்களின் கைராசி மருத்துவரான இரா.கோவிந்தசாமி அவர்களின் மனைவி பெயர் டாக்டர் இராமதிலகம். இவர் மகப்பேறு மருத்துவர். இத்தம்பதிகளுக்கு 1 பெண் மற்றும் 2 ஆண் பிள்ளைகள். மூவருமே தகுதி அடிப்படையில் அரசு கல்லூரியில் படித்த மருத்துவர்கள்.

1. டாக்டர் இந்துமதி MD , DGO மகப்பேறு மருத்துவர் - சென்னை
2. டாக்டர் இரா.மகேந்திரன் MS Gastro, DNB
3. டாக்டர் அருண் MS Ortho

மருத்துவ சேவையும், கல்வி சேவையும் :

சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சேவை புரியும் வகையில், தன் கிராமத்தின் அருகில் உள்ள விருத்தாசலம் நகரில் 1981 செப்டம்பர் 25 ஆம் நாள் சிறிய கட்டிடத்தில் மருத்துவ சேவையை தொடங்கி குறைந்த கட்டணத்தில் இன்று வரை செய்து வருகிறார்.

இளம் வயதில் எதிர்கொண்ட வறுமையை தன் கல்வியாலும், உழைப்பாலும் எதிர்கொண்டு தம் குடும்பத்தையே மருத்துவ குடும்பமாக வளர்த்து ஏழைகளின் சேவகனாக நிற்கும் டாக்டர் இரா.கோவிந்தசாமி அவர்கள் இந்த சமூகத்திற்காக குறைந்த கட்டணத்தில், சேத்தியாதோப்பில் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் விருத்தாசலத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியையும் நடத்தி வருகிறார். இதில் 10 ஏக்கரில் அமைத்துள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி அறக்கட்டளைக்கு தானமாகவும் அளித்துள்ளார் மருத்துவர் இரா.கோவிந்தசாமி. 

இவரது பள்ளியில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை என்பது கூடுதல் சிறப்பு.

பொது வாழ்வும், போராட்டமும், சிறையும் : 

தன் இளம் வயதிலிருந்தே இச்சமூகத்தின் சமனிலையற்ற வறுமை நிறைந்த நிலையை எண்ணி மனக்குமுறலோடு பயணித்த டாக்டர் இரா கோவிந்தசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடன் இணைந்து சமூக விடுதலைக்கான பயணத்தில் 1982 முதல் தம்மை இணைத்து கொண்டார்.

மக்களின் ஏழ்மையை விரட்ட சமூக நீதியின் அங்கமான இடஒதுக்கீடே தக்க ஆயுதம் என உணர்ந்தார். வார இறுதி நாட்களில், டாக்டர் ராமதாஸ் உடன் நடந்தும், சைக்கிளிலும் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பயணங்களை மேற்கொண்டார். வார நாட்கள் முழுவதும் சம்பாதித்த பணத்தினை, வார இறுதி நாட்களில் மருத்துவர் ராமதாசின்  மக்கள் போராட்டத்திற்கு செலவு செய்தார். 

ஒடுக்கப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் விகிதாச்சார இட ஒதுக்கீடு வேண்டி டாக்டர் ராமதாஸ் தலைமையில் 1987 செப்டம்பர் மாதம் நடந்த போராட்டத்தில் 21 உயிர்களை இழந்து 108 சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தது வரலாறு. இப்போராட்டத்தில் டாக்டர் கோவிந்தசாமி அவர்கள் கோயம்பத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு 18 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். இது தவிர பல போராட்டங்களில் 5 முறை சிறை சென்ற சமூக போராளி டாக்டர் ஆர்.ஜி.

மக்கள் போராட்டங்களுக்காக சிறை சென்ற தொண்டர்களின் வழக்கு செலவுகளையும் ஏற்று நடத்தினார். இப்படி கல்விக்காகவும், மக்கள் போராட்டங்களுக்காவும் தம் சொந்த பணத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த இவர் "விருதை வள்ளல்" டாக்டர் ஆர்.ஜி என மக்களால் அன்போடு அழைக்கப்படலானார். 

சட்டமன்ற உறுப்பினராக செய்த சாதனைகள் : 

சமூக சேவைகளாலும், போராட்டங்களாலும் டாக்டர் ஆர்.ஜி, மக்கள் தொண்டனாக உருவெடுத்தார். இவரது எளிமையும், நேர்மையும் வெகுஜன திரளை ஈர்த்தது. இப்படியான அரசியல் வாழ்வின் அங்கமாக மக்களின் பேராதரவுடன் 2001 ல் தமிழக சட்டமன்ற உறுப்பினராக விருத்தாசலம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001- 2006 காலகட்டத்தில் கீழ்கண்ட பல்வேறு பணிகளை செய்தார் டாக்டர் ஆர்.ஜி

1. அனைத்து கிராமங்களுக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து குடி தண்ணீர் பஞ்சம் போக்கினார்
2. கிராமப்புற சிமென்ட் சாலைகள் அமைத்தார்
3. அரசு பள்ளிகளை தரம் உயர்த்தினார்
4. 2005 வெள்ளத்தால் விருத்தாசலம் துண்டான நகரின் இரு புறத்தையும் இணைக்க, பாமகவை சேர்ந்த மத்திய இரயில்வே அமைச்சரை அணுகி 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிறப்பு இரயில் இயக்கிய சாதனையாளர்.
5. ஒரே வாரத்தில் உடைந்த பாலத்தை சீரமைக்க நிதி பெற்று தந்தார்

இப்படி மக்களுக்கான பணிகளை சிறப்பாக செய்யும் டாக்டர் ஆர்.ஜி தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பவர். ஆம், தினமும் அதிகாலை 4.45 மணிக்கு எழுந்து யோகா செய்து விட்டு, 6 கிலோ மீட்டர்கள் நடைபயிற்சி மேற்கொள்வார். இரவு உறங்க செல்லும் முன் 20 நிமிடங்கள் நூல்கள் வாசிக்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்.

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் :

மருத்துவர், போராளி, சட்டமன்ற உறுப்பினர் என மக்கள் சேவை புரிந்து வரும் டாக்டர் ஆர்.ஜி,  6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளராக , 18-ஏப்ரல்-2019 அன்று நடக்கும் தேர்தலில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசால் அறிவிக்கபட்டுள்ளார்.  தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக கீழ்கண்ட திட்டங்களை செயல்படுத்த முயற்சிப்பேன் என உறுதிளித்து போட்டியிடுகிறார். 

1. வெலிங்டன் ஏரி தூர் வாரி ஆழப்படுத்த‌ல்

2. கரும்புச் சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் ஆலை

3. தேசிய நெடுஞ்சாலையில் நவீன வசதிகளுடன் அவசர சிகிச்சை மையம் 

3. புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குதல்

4. பெண்ணாடத்தில் அதி நவீன தீயனைப்பு நிலையம் 

5. நிதிநத்தம், மேலூர், புலிவலம் கிராமங்கள் மழைக்காலங்களில் தனித்தீவாக மாறி துண்டிகப்படுவதைத் தடுக்க மேம்பாலங்கள்

6. கடலூர் நகருக்கு புதிய பேருந்து நிலையம்

7. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை முழுவதும் வழங்குதல்

8. என்.எல்.சியால் இடம் பெயர்க்கப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை 

9. என்.எல்.சி மூன்றாம் சுரங்கத்திற்கு நில கையகப்படுத்தலை தடுத்தல்

10. கடலூர் சிப்காட் பகுதியில் இயற்கையை பாதிக்காதவாறு புதிய தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பினை பெருக்குதல்

11. இரசாயன தொழிற்சாலைகளினால் சுற்று சூழல் கெடாமல் இருக்கும் வழிமுறைகளை செயல்படுத்துதல்

12. முடங்கும் அபாயத்தில் உள்ள பீங்கான் உற்பத்திக் கூடங்களையும், 
தொழில்நுட்பக் கல்லூரினையும் நவீனப்படுத்துதல்

13.மணிமுத்தாறு நதியில் கலக்கும் கழிவுகளை தடுத்து, மறுசுழற்சிக்கு உட்படுத்துதல்

14. பண்ணுருட்டியில் முந்திரிக்கு பதன கிடங்கு அமைத்தல்

15.முந்திரி ஏற்றுமதி மையம் அமைத்தல்

16. விழுப்புரம் - கடலூர் - புதுச்சேரி இணைப்பு ரயில்

17. கடலூர் - சென்னை கிழக்கு கடற்கரை சாலை இரயில் திட்டம்

ஒட்டுமொத்த கடலூர் மாவட்ட மக்கள் பயனுறவும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஒற்றுமையாக வாக்கு சேகரித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore PMK MP candidate Dr Govindhasamy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->