அவ்வளவு தான் மரியாதை! விசிக மாவட்ட செயலாளரை ரோட்டில் நிற்க சொன்ன திமுக வேட்பாளர்! கொந்தளிக்கும் சிறுத்தைகள், கதறும் உடன்பிறப்புகள்!  - Seithipunal
Seithipunal


மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் கடலூர்  மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்,  நெய்வேலி தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் ஒருவர் மட்டுமே பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 

அதன்படி இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கூட்டணி கட்சி தலைவர்கள் ஒவ்வொருவராக பேசிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மக்களவைத் தொகுதியின் பொறுப்பாளர் தாமரைச்செல்வன், கடலூர் மாவட்ட செயலாளர் முல்லை வேந்தன் கலந்து கொண்டனர்.  அப்பொழுது தாமரைசெல்வனுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் முல்லை வேந்தனுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது.  இதனையடுத்து கோபமடைந்த முல்லைவேந்தன் அக்கூட்டத்தை விட்டு வெளியேறினார். 

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அறிவிக்கப்பட்ட வேட்பாளர் யார் என்று யாருக்கும் தெரியவில்லை. வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர் ஆன என்னை வந்து என் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு கேட்டு இருக்கவேண்டும். ஆனால் யாரோ ஒருவர் என்னை போனில் அழைத்து ரோட்டில் வந்து நில்லுங்கள் வேட்பாளர் உங்களை வந்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.  நான் எப்படி அவரை சந்திக்க முடியும் என கோபத்தில் கொந்தளித்து கூட்டத்தில் இருந்து வெளியேறினார். 

இதற்கு முன்னதாக திமுக சார்பில் பேசிய கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தற்போது மதுராந்தகம் தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் புகழேந்தி இந்த வேட்பாளர் யார் என்று எனக்கே தெரியவில்லை, அவருக்கும் என்னை தெரியவில்லை இருந்தாலும் தலைமை அறிவித்துள்ளது அதனால் நாம் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என பேசியுள்ளார். 

இது அங்கிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஏனெனில் அங்கிருந்து நிர்வாகிகளுக்கும் அந்த வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை. சீனியர் நிர்வாகியான புகழேந்திக்காவது தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் தெரியவில்லை என்று கூறியதால், நிர்வாகிகளுக்கே தெரியாத வேட்பாளரை மக்களிடத்தில் எவ்வாறு கொண்டு சேர்ப்பது, எப்படி ஜெயிப்பது என திராவிட முன்னேற்றக் கழகத்தினர் விழிபிதுங்கி கொண்டிருக்கின்றனர். 

இதனை விட இன்னொரு பின்னடைவாக கடலூர் மாவட்டம் திமுக அமைப்பில் இரண்டாகப் பிரிக்கப் பட்ட பின்னர் கடலூர் மேற்கு மாவட்டம் கடலூர் மக்களவைத் தொகுதியில் வருகிறது. அந்த மாவட்ட செயலாளராக திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் இருக்கிறார். இந்த தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கடலூர் தொகுதியில் பெரிதாக கண்டு கொள்ளாமல் சிதம்பரம் தொகுதியில் முகாமிட்டுள்ளதால் இந்த தேர்தலில் வெற்றி என்பது இப்போதைய கேள்விக்குறியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore MP candidate


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->