மக்கள் புறக்கணித்ததால் ஆத்திரத்தில் வரம்பு மீறி முதல்வரை விமர்சிப்பதா? தமிழிசைக்கு குவியும் கண்டனங்கள்..!! - Seithipunal
Seithipunal


மக்கள் புறக்கணித்ததால் ஆத்திரத்தில் வரம்பு மீறி முதல்வரை விமர்சிப்பதா என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பாஜகவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கொள்கையை ஆதரித்து வருகின்றனர். அதனால் மார்க்சிஸ்ட் ஆளும் கேரளாவில் வன்முறையை தூண்ட ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக முயல்கிறது.

அமித்ஷா, அருண் ஜெட்லி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்களை கொண்டு நிகழ்ச்சி நடத்தி கலகத்தை தூண்ட முயற்சித்த போதும், ஆர்எஸ்எஸ், பாஜகவின் பயங்கரவாதத்தை கேரள மக்கள் புரிந்துள்ளதால் அவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்தவர்கள் மார்க்சிஸ்ட் அலுவலகத்தை தாக்கினர். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாக அவற்றை அம்பலப்படுத்தி வருகிறது.

இதனால், பினராயி விஜயன் கேரளாவை விட்டு எங்கும் காலடி வைக்க முடியாது என்று தமிழகத்தை சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

அதே போன்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனும், பினராயி விஜயன் கேரளாவை விட்டு வெளியே போக முடியாது என்று மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை இப்படி மிரட்டுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. மத்திய அமைச்சர் தன்னுடைய அமைச்சர் பதவிக்கு பொருந்தாத வகையில் இவ்வாறு பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேரளாவில் யாத்திரை செல்ல சென்ற போது, மக்கள் புறக்கணித்ததால் ஆத்திரத்தில் வரம்பு மீறி பேசுகிறார்.

சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் இப்படி பேசுவதை இத்துடன் பாஜகவினர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPM contemns to TN BJP leader Dr Tamilisai


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->