காங்கிரஸுக்கு வாக்களிப்பது வீண் - பிரதமர் மோடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில், ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குபதிவும் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம்கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தநிலையில், மூன்றாம்கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், மஹாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் நகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், நாட்டை 60 ஆண்டுகள் ஆளும் வாய்ப்பு காங்கிரஸ்க்கு கிடைத்தது. நாடு துளியும் முன்னேறவில்லை.விளைநிலங்களுக்கு தண்நிறை கூட காங்கிரசால் கொண்டுவர முடியவில்லை.

உங்கள் வாக்குகளை வீணாக்காக வேண்டாம் . ஒரு காலத்தில் 400 எம்.பிக்களை வைத்திருந்த காங்கிரஸ் கட்சியாக 275 நாடாளுமன்ற தொகுதிகலீல் கூட வேட்பாளர்களை நிறுத்த முடியவில்லை. இந்தியாவில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை சாதாரண பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் கூட அக்கட்சி போட்டிடவில்லை. மக்கள் தங்களின் வாக்குகளை வீணடிக்க வேண்டாம் . வலுவான அரசை தேர்வு செய்ய வேண்டும்,என்றார் பிரதமர் மோடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress Voting waste by pm modi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->