காங்கிரஸ் கட்சியின் செயலுக்கு கண்டனத்தை தெரிவித்து., கட்சியின் தலைமைக்கு பறக்க விடப்பட்ட கடிதம்.!! கலக்கத்தில் தலைமை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பாராளுமன்ற தேர்தலானது தற்போது நடைபெற்று வருகிறது. 7 கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களின் கருத்துக்கள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் நிறைவுக்கு பின்னர் செய்தியாளர்களை காங்கிரஸ் கட்சியினர் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி சந்தித்தார். 

அந்த சமயத்தில்., அவரிடம் காங்கிரஸ் கட்சியை சாந்தவர்கள் வரம்பு மீறி நடந்ததை அடுத்து., இது குறித்த பிரச்சனையானது பெரும் பிரளயமாக மாறியது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியை சார்ந்த சில நபராளுக்கு இடைக்கால தடையை விதித்து கட்சியில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பானது தற்போது நீக்கப்பட்டு., அவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளனர். 

இதனை அறிந்த பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து., காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி தனது பதிலை அளித்துள்ளார். இன்றுள்ள நிலைமைகளில் கட்சிக்காக உழைப்பவர்களை விட., அடியாட்களுக்கு அதிகளவு முக்கியத்துவத்தை காங்கிரஸ் கட்சியானது அளிக்கிறது. 

காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் வரும் விமர்சனங்கள் மற்றும் தாக்குதலை சந்தித்து எதிர்த்து வந்த நிலையில்., காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை மிரட்டிய நபர்களுக்கு எந்த விதமான எதிர்ப்பும் தண்டனையும் கிடைக்காதது., பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 


காங்கிரஸ் கட்சியில் தான் இருந்த பதவியான காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பதவியை இராஜினாமா செய்வதாகவும்., அடிப்படை உறுப்பினர் போன்ற பதவியில் இருந்து அணைத்து பதவியிலும் இருந்து நீங்குவதற்கு ராகுல்காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress party press reporter Priyanka Chaturvedi resign their position


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->