கோவிலுக்கு சென்ற காங்கிரஸ் எம்பி தலையில் வழிந்தோடிய ரத்தம்.! காங்கிரஸின் தோல்வியை உறுதி செய்யவே கடவுள் நிகழ்த்தினாரா?!  - Seithipunal
Seithipunal


17 வது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்கு பதிவு கடந்த 11 ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் 118 ஆம் தேதி, தமிழகம், புதுவை உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  

இந்நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் சசிதரூர் நேற்று கோவிலுக்கு சென்று வழிபட்ட போது, அவர் மண்டை உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்துப்பட்டுள்ளார்.

நேற்று விஷூ பண்டிகை கேரளாவில் கொண்டாடப்பட்டது. இதில், கோயிலில் துலாபாரம் வழங்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், திருவனந்புரம் தொகுதி எம்.பி.சசிதரூர் முடிவு செய்து, தம்பனூரில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலுக்கு இன்று காலை வந்த எம்.பி. சசிதரூர் தனது எடைக்கு எடையாக துலாபார தராசில் வாழைப்பழங்களை வழங்கினார்.

அப்போது, திடீரென தராசு தட்டின் இரும்புச் சங்கிலி அறுந்து விழுவே, சசிதரூர் கீழே விழுந்து கால், தலையில்  பலத்த காயம் அடைந்தார். அவர் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோவிலில் துலாபாரம் செய்யும் போது விபத்து ஏற்பட்டு இருப்பதும், தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்குவதற்காக கோவிலுக்கு சென்ற காங்கிரஸின் ஒரு மூத்த தலைவருக்கு இப்படி நடந்து இருப்பதும், காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் தோல்வியடையும் என்பதை உணர்த்தவே அம்மன் இதனை நிகழ்த்தியுள்ளதாக காங்கிரஸ் தொண்டர்களே பேசி வருகின்றனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CONGRESS MP HEAD DAMAGED IN TEMPLE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->