மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்: முதல்வர் யார்?! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி அடைந்துள்ளது. இருப்பினும் மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க போதிய மெஜாரிட்டி இல்லாத நிலையில் இன்று பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ் வாடிக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமைக் கோருகிறது.

மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

ம.பியில் ஆட்சி அமைக்க  116 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 2 பேரின் ஆதரவு கேட்டு சமாஜ் வாடி மற்றும் பகுஜன் சமாஜ் வாடிக் கட்சிகளின் ஆதரவுக் கேட்டது காங்கிரஸ்.

இவ்விரு கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க சம்மதித்ததை அடுத்து பாஜக  முதல்வர் சிவராஜ் சிங் பதவி விலகினார். சமாஜ் வாடி மற்றும் பகுஜன் சமாஜ் வாடி கட்சி ஆதரவுக் கொடுத்ததை அடுத்து காங்கிரசின் பலம் 121 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கமல்நாத் தலைமையில் ஆளுநர் ஆனந்தி பென்னைச் சந்தித்து, காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார். இவருடன் திக்விஜய் சிங், மற்றும் ஜோதிராத்ய சிந்தியா ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத்தொடர்ந்து நாளை பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress forms Government in MP


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->