காங்கிரஸுக்கு இப்படி ஒரு படு தோல்வியா.? காங்கிரஸ் கட்சியை வச்சு செய்த எம்என்எப் கட்சி.!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு நடந்து முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் இந்த 5 மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை  நடைப்பெற்று வருகிறது.

இந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கானா, மிசோராம் மாநிலத்தை தவிர மீதம் உள்ள மத்திய பிரதேஷ், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைக்க போகிறது. 

ஆனால் மிசோராம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். தற்போது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்றுவந்த வேலையில், இந்த தேர்தலில் தற்போது உள்ள நிலவரப்படி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

மிசோரம் : மிசோரம் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பெரும்பான்மை பெறுவதற்கு 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

எம்.என்.எஃப்   = 26
காங்கிரஸ்      =  5
மற்றவை        =  8
பிஜேபி             =  1 

இதன் மூலம் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) கட்சி மிசோராம் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கிறது. இந்த வெற்றியை அந்த கட்சியின் தொண்டர்கள் கட்சி அலுவலகங்களில் இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CONGRESS FAIL IN MISOROM


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->