மோடிக்கு ''கவுன்டவுன்'' ஸ்டார்ட்..! சோனியாகாந்தி ஆவேசம்..!! ராகுலுக்கு கூட்டணி அதிகாரம்..!!  - Seithipunal
Seithipunal


அகில இந்திய  காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி இருந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் அவரது மகன் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றார். 

ராகுல் பதவியேற்ற 2 மாதங்களில் தேசிய அளவிலான  காரிய கமிட்டியை கலைத்தார். கடந்த 17ம் தேதி, 51 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியில், 23 பேருக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய காரிய கமிட்டியை அமைத்தார். 

இதனையடுத்து, இன்று டெல்லியில் காரிய கமிட்டியின் முதல்நாள் கூட்டம் தொடங்கியது, இந்த கூட்டத்தில், வரும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல், இந்தாண்டு டிசம்பரில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 4  மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, ‘‘இந்தியாவின் குரலாக காங்கிரஸின் பங்களிப்பு இருக்க வேண்டும். நாட்டில் அப்பாவிகள் மீது தாக்குதல்கள், தலித்துகள், பழங்குடியினர்,  சிறுபான்மையினர், ஏழைகள் ஆகியோருக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும்'' என பேசினார்.

இதனையடுத்து பேசிய ப.சிதம்பரம், ''12 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளதால், 2019 தேர்தலில் தனித்து 150 இடங்களில் வெற்றிபெற முடியும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருமித்த கருத்துடைய மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும்'' என தெரிவித்தார்.

மேலும், இந்தக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, ''இந்த செயற்குழு கூட்டத்திலுருந்து மோடி அரசிற்கு எதிரான கவுண்டன் தொடங்கிவிட்டது'' என ஆவேசமாக பேசினார். இந்த கூட்டத்தின் முடிவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CONGRESS DELHI MEETING REPORT


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->