சிவகங்கை வேட்பாளர் அறிவிப்பு! ஹச் ராஜாவை எதிர்க்கும் வேட்பாளர் யார் தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் அமைந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும் பாண்டிச்சேரி ஒரு தொகுதியாக 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சிவகங்கை தவிர்த்த மற்ற 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில் சிவகங்கை தொகுதி மட்டும்  இழுபறியில் நீடித்தது. 

அந்த தொகுதியின் மைந்தரான  சிதம்பரம் தொகுதியை தனக்கு, தன் மகனுக்கு, மருமகளுக்கு என யாருக்காவது அளிக்கவில்லை என்றால் கட்சியை விட்டு விலகுவேன் என்றும் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்று எச்சரிப்பதாக கூறப்பட்டதையடுத்து குறைந்தபட்சம் அவருடைய ஆதரவாளரான தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருக்கும் அழகிரிக்கு ஒதுக்கவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. 

அவருக்கு சீட் கொடுக்க பலமான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் ஒரு குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் கார்த்தி சிதம்பரத்திற்கு கிடையாது என்றும் ஏனெனில் சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் என்ன நிர்ப்பந்தமோ என தெரியவில்லை கார்த்தி சிதம்பரத்தின் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்திருந்தாலும் பரவாயில்லை என அவரை வேட்பாளராக அறிவித்து டெல்லி தலைமை உத்தரவிட்டு உள்ளது. 

இதன் மூலம் தமிழகத்தில் முக்கிய கட்சிகளில் கடைசியாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என்ற பெருமையுடன் கார்த்திக் சிதம்பரம் தமிழக தேர்தல் களத்தில் குதிக்கிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress announced candidate for sivaganga constituency


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->