அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், வளர்ச்சியும், வளமும், நலமும் பொங்க வேண்டும் : டாக்டர் அன்புமணி ராம்தாஸ் பொங்கல் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


உழைப்பாளர்களின் திருநாளான பொங்கல் திருநாளையும், தமிழ் புத்தாண்டு நாளையும் கொண்டாடும் கொண்டாடும் உலககெங்கும் உள்ள தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு எனது இனிய நல்வாழ்த்துக்கள்.

திருவிழாக்களின் திருவிழா என்பது பொங்கல் திருவிழா தான். தமிழர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், கலாச்சாரம், இயற்கை வழிபாடு, உழவுத் தொழிலுக்கு உதவிய இயற்கை தொடங்கி கால்நடைகள் வரை அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு, நண்பர்கள் முதல் உறவுகள் வரை அனைவரும் ஒன்று கூடல் உள்ளிட்ட அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பது தான் தமிழர் திருநாளின் சிறப்பு ஆகும்.

பொதுவாகவே திருவிழாக்கள் கடந்த கால நிகழ்வுகளையும், வெற்றிகளையும் நினைவு கூறவும், தெய்வங்களை வணங்கவும் கொண்டாடப்படுவவை ஆகும். ஆனால், பொங்கல் திருநாள் மட்டும் இயற்கையை வணங்கவும், நன்றி தெரிவிக்கவும் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் விழா என்பது மகிழ்ச்சிக்கும், மலர்ச்சிக்குமான திருநாள் என்பதை அது வடிவமைக்கப்பட்டுள்ள முறையிலிருந்தே உணர்ந்து கொள்ளலாம். பொங்கல் திருநாளுக்கான அடிப்படையே அமோக விளைச்சலும், அதனால் விளையும் மகிழ்ச்சியும் தான். ஆனால், கடந்த பல ஆண்டுகளாகவே விவசாயத்தின் வீழ்ச்சியால் பொங்கல் திருநாள் முழுமையான மகிழ்ச்சி தரவில்லை.

புல்லின் மீதுள்ள பனித்துளி வெயில் பட்டதும் மறைவதைப் போல புதிதாக புலரும் தைத் திங்கள் மக்களின் துன்பத்தையும், வருத்தத்தையும் நீக்கும் என்பதே எனது நம்பிக்கை. அது நிஜமாகி அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், வளர்ச்சியும், வளமும், நலமும் பொங்க வேண்டும்; நாட்டில் அமைதியும், முன்னேற்றமும் செழிக்க வேண்டுமென மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congratulations to docror anbumani's pongal celebration


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->