மேலிடத்துக்கு அப்டேட் அடித்த எடப்பாடி.. பிரதமரை நோக்கி விரையும் அளுநர் - தமிழக அரசியலில் சூட்டை கிளப்பும் கடிதம்.! - Seithipunal
Seithipunal


மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சிறப்பு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமருக்கு அனுப்பப்பட்டது.

தமிழகத்தின் அனுமதியின்றி காவிரியில் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்  என்று குறிப்பிடப்பட்ட தீர்மான நகலுடன் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

 

https://img.seithipunal.com/large/large_---13504.jpg

 

முன்னதாக மேகதாது அணை திட்டத்துக்கு, தமிழக அரசும், தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பது தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது மட்டுமில்லாமல், பிரதமர் மோடிக்கும் கடிதம் மூலம் தமிழக மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்தை விளக்கி உள்ளது.

மேலும் இது தொடர்பாக தமிழக சட்டசபையை கூட்டி சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் தமிழக அரசின் தீர்மானத்தை ஆதரித்து, நிறைவேற்றி தந்தோம் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில்,  நாளை மாலை பிரதமரை சந்திக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதனால் தமிழக அரசியல் களம் மீண்டு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm edappadi wrote letter to pm


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->