தமிழக காங்கிரசின் முதலமைச்சர் வேட்பாளர் நான் மட்டும் தான்..! மீண்டும் வெடித்தது பூகம்பம்..!! - Seithipunal
Seithipunal


நேற்று கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ஆகும் ஆசையும், தகுதியும் தனக்கு உள்ளதாக, அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நெய்வேலி இந்திராநகரில் உள்ள எஸ்பிடி திருமண மண்டபத்தில், கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை தாங்கி பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது. ''தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். இந்த செயல்வீரர்கள் கூட்டம் மாநாடு போல் உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் இருந்தது. நம் கட்சியின் தொண்டர்கள் ஒன்றாக இருக்கின்றார்கள். ஆனால் தலைவர்கள் தான் வேறுபட்டு உள்ளார்கள். இந்த நிலை மாறி அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும். தமிழகத்தில் காமராஜர் ஆட்சி விரைவில் அமைய வேண்டும். யார் முதல்-அமைச்சர் என்பது முக்கியமல்ல. தலைவர் ராகுல் விட்ட பணியை சிறப்பாக செய்து வருகிறேன். முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை, தகுதி எனக்கு உள்ளது.

தமிழகத்தில் நடைபெறுவது மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி இல்லை, எம்எல்ஏ-க்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சி விரைவில் அகற்றப்பட வேண்டும். காங்கிரஸ் நிர்வாகிகள் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும். மக்கள் பிரச்சனைக்காக அதிகாரிகளை சந்திக்க வேண்டும். கட்சியில் அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்''. என தெரிவித்தார். 

மேலும், மத்திய அரசை மாற்ற காங்கிரசால் மட்டுமே முடியும். நாடு முழுவதும் ராகுல் அலை வீசுகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் பிரதமராக வர வேண்டும் ஏன் இந்திய மக்கள் அனைவரும் எதிர்நோக்கியுள்ளனர். என்றும் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm candidate in tn congress party


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->