சற்றுமுன் சின்னத்தம்பிக்கு ஏற்பட்ட பரிதாபம்! - Seithipunal
Seithipunal


வனங்களில் வாழ்ந்து கொண்டிருந்த வனவிலங்குகளை மனிதர்களின் தேவைகளுக்காக மனித இனம் வனத்தின் உள்ளே நுழைந்து, வனவிலங்குகள் அங்கிருந்து அப்பறுபடுத்தப்படுவதே மனிதர்களின் பார்வையில் வளர்ச்சி என்பதாகும். 

வன விலங்குகளோ மனிதர்களுக்காக விட்டுக்கொடுத்த தங்களுடைய வாழிடத்திலே வாழ்ந்தாலும் அது மனிதன் வாழும் இடமாக மாறிப்போனது. அப்போது வனத்திலிருந்து வனவிலங்குகள் மனித வாழ்வு இடத்திற்கு வந்ததாக பேசத் தெரிந்த மனித உலகம் சொல்கிறது. ஆனால் பேசத் தெரியாத விலங்குகளுக்கு தான் தெரியும் அது அவர்களுடைய இடம் என்று. 

கடந்த சில நாட்களுக்கு முன் மனிதர்களுடைய பகுதியில் சுற்றி வருவதாக சின்னத்தம்பி என்ற காட்டு யானை கடுமையான சித்திரவதைகளுக்கு பின்னர் தந்தம் உடைந்த நிலையில், இரத்த காயங்களுடன் வனப்பகுதிகளுக்குள் கொண்டு விடபட்டது. அது மனிதர்கள் வாழும் இடத்திலேயே சுற்றி வந்தாலும் மனிதர்கள் யாரையும் தாக்கவில்லை என்றே மக்கள் அனைவரும் தெரிவித்து பெரிதும் வருத்தப்பட்டார்கள். 

இந்நிலையில் வனத்தில் இருந்த சின்னத்தம்பி யானை மீண்டும் திருப்பூர் மாவட்டத்தில் மனிதர்கள் வாழும் பகுதிகளில் நடமாட்டத்தினைக் தொடங்கியுள்ளதால் மீண்டும் விரட்ட தொடங்கியது வனத்துறை. இதனையடுத்து மக்களும்  சின்னதம்பி யானையை விரட்ட தொடங்க, ஓட்டம் பிடித்த சின்னத்தம்பி 50 கிமீ ஓடிய பிறகு மயங்கி படுத்துகொண்டான். 

50 கிமீ ஓடிய சின்னத்தம்பிக்கு உணவு, நீர் எதுவும் இல்லாத காரணத்தினால் சோர்வடைந்தது. அதனால் மடத்துக்குளம் பகுதியில் மயங்கி விழுந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வனத்துறை அமைச்சர் சின்னத்தம்பி யானை மன  உளைச்சல் இன்றி மகிழ்ச்சியாக இருப்பதாகவும், விரைவில் எவ்வித பாதிப்புமின்றி கும்கி யானையாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார். 

மன உளைச்சல், பாதிப்பு என்பதெல்லாம் யானையா வாயை திறந்து சொல்லிவிட போகிறது என்ற எண்ணம் தானே! இந்த புவியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரும் ஒவ்வொன்றை சார்ந்து வாழ வேண்டும் என்பதே இயற்கை நியதி. ஆனால்  இந்த கொலைகார மனித உலகமோ தான் சுகபோகமாக வாழ மற்றவர்களை அழிப்பதே முதன்மை வேலையாக வைத்துள்ளது. யாராவது சொல்லுங்கள் மனித இனமும் ஒருநாள் இப்படி ஓட வேண்டிய நிலை நிச்சயம் ஏற்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinnathambi Elephant again come to peoples place


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->