பாமகவை எதிர்க்க திமுக செய்யும் செயலால் பரிதாபமாக நிற்கும் திருமாவளவன்! சிதம்பரத்தில் பானை உடையாமல் தப்பிக்குமா?  - Seithipunal
Seithipunal


17வது மக்களவைதேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள  நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான சிதம்பரத்தில் திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர்  திருமாவளவன் 5 வது முறையாக போட்டியிடுகிறார். அங்கே என்ன நிலை என்ற விசாரித்ததில் மக்கள் கூறியது விசிகவிற்கு சாதகம் என்பது எங்கே என்று தேடக்கூடிய நிலை தான் உள்ளது. 

தலித் மக்களின் அமைப்பாக பின்னர் கட்சியாக உருவான விசிக சார்பில் திருமாவளவனை 2009 ஆம் ஆண்டு அனைத்து சமூக மக்களும் ஆதரவு கொடுத்து வாக்களித்து  MP ஆக வெற்றிபெறச் செய்தனர். ஆனால் அதற்குப் பிறகு அங்கு வாழும் மக்களிடையே எப்பொழுதும் இல்லாத வகையிலான முட்டல் மோதல்கள் உருவானது. இதனை  கவனத்தில் கொண்ட பொதுமக்கள் இனிமேல் எக்காலத்திலும் திருமாவளவன் சிதம்பரத்தில் நிற்ககூடாது என எண்ணி அதற்கடுத்த இரண்டு தேர்தல்களிலும் திருமாவளவனை புறக்கணித்தனர். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் திருமாவளவனை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 

சாதிய வேற்றுமை பார்க்கப்பட்ட காலத்தில் கூட பிற சாதியினருடன் நாங்கள் இணக்கமாக தான் இருந்தோம், ஆனால் இன்று திருமாவளவனை பின்பற்றும் இளைஞர்களால் வேற்றுமை அதிகரித்து வேறுபாடு தான் அதிகரித்து உள்ளது. அவர் இங்கே வெற்றி பெற்றால் எங்கள் சமுதாயம் மற்ற சமுதாயங்களால் பிரித்து பார்க்கும் நிலை அதிகமாகும் எனவும் அச்சப்படுகின்றனர். 

இதனையெல்லாம் தாண்டி அவரை நாங்கள் வெற்றி பெற வைத்தாலும், சிதம்பரம் பகுதியை தாண்டி வேறு எங்கும் திருமாவளவனை பிரச்சாரம் கூட செய்ய விடாமல் பல நெருக்கடிகளை திணித்துள்ள திமுகவின் ஸ்டாலின்  என்ன அதிகார பகிர்வை கொடுத்துவிட போகிறார் என்ற கேள்வியையும் வைக்கிறார்கள். இதனையெல்லாம் தாண்டி வேதனையளிக்கும் விதமாக விழுப்புரம் தனி தொகுதியில் விசிக வின் பொதுச் செயலாளரை திமுகவின் சின்னத்தில் வேட்பாளராக நிற்க வைக்க, திமுகவின் அடிப்படை உறுப்பினராகவும் இணைத்துக்கொண்டு அடக்குமுறைகளை வைத்துள்ளது திமுக. எங்கள் இளைஞர்களை  அடங்கமறு, அத்துமீறு என கூறும் திருமாவளவன் திமுகவின் அடுக்குமுறைக்கு எதிராக அவரே எதுவுமே செய்ய முடியாத நிலையில், எங்களுக்கு எப்படி பேசுவார் எனவும் கேட்காமல் இல்லை. 

தன் சாதி மக்களின் ஆதரவோ இப்படி இருக்க மற்ற சமூக மக்களோ முற்றிலும் திருமாவளவனை வெறுக்கின்றனர். ஏனென்றால் பல மேடைகளில் மாற்று சமுதாயப் பெண்களை இழிவாகவும், சரக்கும் மிடுக்கும் எங்களிடமே உள்ளது என வசனங்களையும் பேசியது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். கூட்டணி கட்சியாகவே இருந்தாலும் திருமாவளவனுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று தான் பரவலாக பேச்சும் அடிபடுகிறது. 

இதனையெல்லம் தாண்டி, பிரச்சார மேடைகளில் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தவாக, மூமுக போன்ற கட்சிகளின் கொடிகள் கூட பட்டொளி வீசி பார்க்கிறது, இரண்டு தொகுதியில் போட்டியிடும் விசிக கொடியோ அக்கட்சி தொண்டர்கள் கையில் மட்டும் தான் பறக்கிறது. 

இருந்தும் தான் வெற்றி பெற்றுவிடலாம் என திருமாவளவன் கணக்கு போட்டு வைத்திருப்பது தொகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களின் வாக்குகள் தான். ஏனெனில் சிதம்பரம் தொகுதியில் லால்பேட்டை, பரங்கிபேட்டை, ஆயங்குடி, லப்பை குடிகாடு போன்ற பகுதிகளில் அவர்கள் நிறைந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாக்கு நிச்சயமாக வெற்றிபெற வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக திமுக நடந்து கொண்டிருக்கிறது. மத்திய சென்னையில் தயாநிதி மாறன்  இரண்டு முறை தொகுதியில் வெற்றி பெற்றும் எட்டிபார்க்காத காரணத்தினால் மக்களிடையே பெரிதும் வரவேற்பில்லை. தயாநிதி மாறன் பெரிதும் நம்பி நிற்பது இஸ்லாமிய வாக்குகள் தான். ஆனால் அதற்கும் வழி இல்லாமல் ஆக்கிவிட்டார் தினகரன். அவர் இஸ்லாமிய கட்சியான SDPI கட்சியை அங்கே நிறுத்தி இஸ்லாமிய வாக்குகள் அங்கே செல்லும்படியாகிவிட்டது. 

இதனால் அதிருப்தி அடைந்த திமுக தரப்பு SDPI கட்சியுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனையடுத்து அனைத்து தொகுதிகளிலுமே இஸ்லாமிய வாக்குகள் தினகரன் அணிக்கு செல்ல வேண்டும் என SDPI கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த பிரச்சனை தான் சிதம்பரத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. பிற சமுதாயத்தினர் திருமாவளவனை ஆதரிக்காத நிலையில் இஸ்லாமிய வாக்குகளும் பிரிந்து சென்றால் விசிக பானை உடையாமல் தப்பிப்பது கடினமே...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHIDAMBARAM THIRUMAVALAVAN


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->