முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 900 கோடி சொத்து யாருக்கு.? நீதிமன்றம் எடுக்க போகும் முக்கிய முடிவு.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தங்கள் மனுவில், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை ஜெ.தீபா, தீபக் ஆகியோருக்கு கிடையாது என கூறியுள்ளனர்

இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை தனது கட்சிக்காரருக்கே இருப்பதாக கூறினார். அதிமுக உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதன்பின்னர், வருமான வரித்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வேறு ஒரு வழக்கில் ஜனவரி 24ல் தாக்கல் செய்த அதே அறிக்கையை, இந்த வழக்கிலும் தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதா செல்வ வரி ரூ.10.12 கோடியும், வருமான வரி ரூ.6.62 கோடி பாக்கிவைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high announcement about jayalalitha assert


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->