தமிழக அரசின் முக்கிய அதிகாரி கைது செய்யப்படுகிறார்.! சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன் அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளை கொண்ட கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதுார கல்வி மையங்களை நடத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மாவை கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதுார கல்வி மையங்களை அதன் குறிப்பிட்ட எல்லையில் மட்டுமே நடத்த வேண்டும். ஆனால், பாரதியார் பல்கலை நிர்வாகம், சி.பி.ஓ.பி., சி.சி.ஐ.ஐ., சி.பி.பி., என்று பல விதமான பெயர்களில், தனது எல்லயைக்கு அப்பாலும் தொலைதுார கல்வி மையங்களை, பல ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளது.

அது மட்டுமில்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என்று 380க்கும் அதிகமான தொலைதுார கல்வி மையங்களை மேலும் துவக்க, பாரதியார் பல்கலை அனுமதி அளித்து உள்ளது. இந்த மையங்களில் படிக்கும் மாணவர்கள் ஏனோ தானோ வென்று படித்து தேர்வில் வெற்றியும் பெற்று விடுகின்றனர். அதே சமயத்தில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், கஷ்டப்பட்டு படித்துத் தேர்வு எழுதும் மாணவர்களால் எளிதில் தேர்ச்சி பெற முடிவதில்லை. 

இதற்கு தமிழக அரசின் உயர் கல்வித்துறையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் கல்லுாரிகள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பாரதியார் பல்கலை பதிவாளர், பல்கலை மானியக்குழு செயலர், தொலைதுாரக் கல்வி அமைப்பு துணைச் செயலர், தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலர் ஆகியோர், எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு நடைபெற்ற விசாரணையில் தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற தடையை மீறி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மையம் துவங்க சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜர் ஆகாத தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத் ராம் சர்மாவை கைது செய்து ஜனவரி 9ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai hc new order in kovai bharathiar university case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->