ராக்கெட்டில் ஏறி சந்திர மண்டலத்திற்கு சென்ற எடப்பாடி! சரமாரியாக குற்றசாட்டுகளை அடுக்கிய தினகரன்! - Seithipunal
Seithipunal


கடந்த 16 ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக  நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிப்படைந்துள்ளது. புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த புயலால் பாதித்த மக்கள் அனைவரும் குடிநீர், மின்சாரம், உணவு மற்றும் தங்க இடம் கூட இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை செய்து வருகின்றது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும், சினிமா பிரபலங்களும், தன்னார்வலர்களும் முன் வந்து, டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அமமுக துணை பொதுசெயலாளர், தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செயல்பட்டதை போல தற்போதைய முதல்வர் செயல்படவில்லை. அதனால் ஒரு துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது. 

கஜா புயலுக்கு முதல்வரின் வருகையை காமராஜர் போல விளம்பரப்படுத்துவதும், ராக்கெட்டில் ஏறி சந்திர மண்டலத்திற்கு செல்வது போல சித்தரிக்கப்படுவதும் மிகவும் கொடுமை. அவர் குறைந்தது 5 நாட்களாவது தங்கி நிவாரண பணிகளை செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்சியை விட்டு விலக வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் அதில், கேட்க ஆள் இல்லை என்றால், அப்படியே மக்களை விட்டு சென்றுவிடுவதா எனவும், 10 நாட்கள் எங்கள் கட்சி சார்பில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cheif minister going in the rocket


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->