ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட சவால்..? முகத்திரையை கிழித்த மத்திய அமைச்சர் - பரபரப்பு பேட்டி..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து வருகிறது, எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் போது தமிழகத்திற்கு எத்தனை திட்டத்தை கொண்டுவந்தார்கள்? பொதுமேடையில் விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா? என்று பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்துள்ளார்.

அதே நேரத்தில் மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு எத்தனை ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் செய்தது என்பதை பட்டியலிட நாங்கள் தயார்  இருக்கிறோம். இலங்கை தமிழர் விவகாரத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வைகோ பேசியது போல், இப்போதும் பேசுவார் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று மதியம் தமிழகம் வர உள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தமிழக கட்சிகள் ஈடுபட உள்ளன.

இதில் பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து பாமக, அதிமுக கட்சியின் கூட்டணி முடிவு குறித்து இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

challenge to the dmk leader stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->