ஜியோ நிறுவனத்துக்கு அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் 69,000 கோடி இழப்பு.?! மத்திய அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஜியோ நிறுவனத்துக்கு நுண்ணலை அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் 560 கோடி  நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார். 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கும், எம்.டி.எஸ் நிறுவனத்திற்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு  நுண்ணலை அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு 560 கோடி ரூபாய் நஷ்ட்டம் ஏற்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. 

மேலும், இதில் முறைகேடு நடந்து உள்ளதாகவும், உச்சநீதிமன்றம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் வழங்கிய தீர்ப்பை முன்னுதாரணம் காட்டி, ஜியோ நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் வழங்கப்பட்டதால் 560 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால், இந்திய அரசுக்கு 69,000 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இந்நிலையில், மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா இந்தவிவகாரம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில், ''முதலில் விண்ணப்பிப்பவருக்கே அலைக்கற்றை உரிமம் வழங்க வேண்டும் என்ற விதியை 2ஜி அலைக்கற்றைக்கு தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

ஆனால், தற்போது மத்திய அரசு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏதும் காங்கிரஸ் சொல்வதுபோல் ஒதுக்கீடு செய்யவில்லை, மாறாக நுண்ணலை அலைக்கற்றையில் தான் ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தின் 2ஜி தீர்ப்பு இந்த விவகாரத்தில் செல்லாது. அதுமட்டுமில்லாமல், முறையான வழிகாட்டுதலின் படியே இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்துள்ளது'' என்று மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central minister open talk about jio issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->