மருத்துவர் அன்புமணி எம்பி கண்டனம் தெரிவிக்க, சற்றுமுன் ரத்து செய்த மத்திய அரசு! - Seithipunal
Seithipunal


தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வுகளை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை ஆணையிட்டுள்ள நிலையில், அதை மதிக்காமல் கலந்தாய்வை தொடரப்போவதாக இந்திய மருத்துவக் குழு அறிவித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என இன்று காலை பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தெரிவித்தார். 

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க ஆணையிட வலியுறுத்தி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.,  அவ்வழக்கை விசாரித்த  உயர்நீதிமன்றம், தமிழில் அத்தேர்வை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும்  ஒரு வினாவுக்கு 4 வினாக்கள் வீதம் மொத்தம் 196 கருணை மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று கடந்த 10&ஆம் தேதி  தீர்ப்பளித்திருந்தது. 

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுப்பதற்காக இந்திய மருத்துவக் குழு கூறியிருக்கும் காரணங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதவை ஆகும்.  தவறான வினாக்களுக்கு கருணை மதிப்பெண்  வழங்கப்பட வேண்டும் என்பதும், அதனடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப் பட வேண்டும் என்பதும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணை மட்டுமே என்றும், மருத்துவக் கலந்தாய்வை நிறுத்தி வைக்கும்படி தங்களுக்கு நேரடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் மருத்துவக் கலந்தாய்வை தொடரப்போவதாகவும் இந்திய மருத்துவக் குழுவின் அதிகாரிகள் நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு தெரிவித்துள்ளனர் என மருத்துவர் அன்புமணி இன்றைய அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டதால், ஏற்கனவே வெளியிடப்பட்ட தரவரிசை செல்லாததாகிவிட்டது. அதன்பின் எந்த தரவரிசை அடிப்படையில் இந்திய மருத்துவக் குழு கலந்தாய்வை நடத்த முடியும்? புதிய தரவரிசை அடிப்படையில் புதிதாக கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறி விட்டதால், பழைய கலந்தாய்வை நிறுத்த வேண்டியது கட்டாயம் என அன்புமணி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அகில இந்திய அளவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை இயக்குநரகம் வெளியிட்டது. மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ரத்து செய்துள்ள நிலையில்  மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt stop the councilling of 2nd scheudule of mbbs bds


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->