திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசு, திமுகதான் என்று நிரூபித்து காட்டிய ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் 10 % இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு 103-வது சட்ட, திருத்தத்தின் மூலம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா சில நாட்கள் முன் நிறைவேறியது.

ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் (12.01.2019) அன்று கையத்திட்டு ஒப்புதல் வழங்கினார். இதைதொடர்ந்து, அவரது ஒப்புதலுடன் இதற்கான இந்திய அரசின் அரசிதழ் அறிவிக்கையும் வெளியானது. இதன்மூலம் நாடு முழுவதும் (12.01.2019) முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் சட்டத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மதோதவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடந்துள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு போட்டதின் முலம் திராவிட இயக்கத்தின் உண்மையான வாரிசாக இருக்க கூடிய இயக்கமாக திமுக இருப்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார் என்று கனிமொழி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt plan in Kanimozhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->