தமிழகத்திற்கு 75 ஆயிரம் கோடி நிதி.! மத்திய அரசு தர தயார் முதல்வர் பேச்சு! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மதியம் சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, அவர், தமிழக சாலைகளை மேம்படுத்தும் திட்டத்திற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறினார்.

மேலும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பொறுக்க முடியாத எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பல்வேறு குறைகளை கூறி வருகிறார்கள். நேராக எதிர்க்க முடியாத காரணத்தினால் பசுமைசாலை போன்ற திட்டங்களை வைத்து எதித்து போராட்டம் செய்து வருகின்றனர், என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், சேலம் மாநகர் மட்டுமல்லாமல் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளான தம்மம்பட்டி, ஆத்தூர், ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட உள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள மாநில சாலைகளை விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. அந்த நிதியை  மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central goverment ready to give to finance for highway implement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->