சீட் வாங்கி கொடுத்தது என் குத்தமா? பங்குனி வெயிலில் இப்படி ஓட விட்டுடாங்களே! வீட்டுக்குள்ளயே முடங்கிய திமுக வேட்பாளர்!  - Seithipunal
Seithipunal


இந்திய நாடளுமன்ற பொதுதேர்தல் 2019 ஏப்ரல் 18 ம்தேதி தமிழகத்தில் வாக்குபதிவு நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கி விறுவிறுப்பான களபணிகளை தொடங்கிவிட்டனர். தமிழக முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், மற்ற கட்சி தலைவர்கள் என அனைவரும்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

தமிழகமே  தேர்தல்களம்  சூடுபிடித்து உள்ள நிலையில் சூரியன் கட்சி வேட்பாளரோ சுருண்டு போய் ஏசி ரூம்மில் கிடக்கிறார். சென்னை என்றால் திமுக கோட்டை என கழக கண்மணிகள் மார்தட்டிய காலம் எல்லாம் மலையேறிவிட்டன. மத்திய சென்னையில் சீட் வாங்கிவிட்டு பிரச்சாரம் செய்ய போகமல் சிறைக்கு செல்ல நேரிடுமோ என்ற அச்சத்தில் உள்ளார் சூரியகட்சி வேட்பளார். 

மத்திய சென்னை  திமுகவின் வாரிசு தொகுதி 2004 , 2009 தேர்தலில் தயாநிதி மாறன் போட்டியிட்டு வென்ற தொகுதி. கடந்த முறை 2014 இல் அதிமுகவின் வசம் அந்த தொகுதி செல்ல தோல்வியை தழுவினார் தயாநிதி. இந்த முறையும் மத்திய சென்னையை தயாநிதி கேட்க திமு கழகம் அவருக்கு சீட் தர யோசித்துவிட்டது. தொகுதியில் அவருக்கு செல்வாக்கு இல்லை. வழக்குகளால் மக்கள் மத்தியில் பல அதிருப்தி அலைகள் தயாநிதிக்கு எதிராக உள்ளது என திமுக தலைமைக்கு ஒரு தகவலை கட்சி தலைவர் மருமகன் அனுப்பிவிட்டார். இந்த தகவலை அடுத்து ஸ்டாலின் சீட் இல்லை என  கூறி உள்ளார். 

ஆனாலும் மாமா குடும்பத்தின் மீது கொண்ட பாசத்தினால் தயாநிதிக்கு சீட்டினை,  சகோதரர் ஸ்டாலினை வலியுறுத்தி பெற்றுக்கொடுத்தவர் கலைஞரின் செல்ல மகள் செல்வி தான் என்ற தகவலும் வெளியானது. இந்த விசயம் மருமகன் காதுக்கு செல்ல மிகுந்த கோபம் அடைந்துந்துள்ளார். ஏனெனில், மாறன் குடும்பம் யாரும் டெல்லிக்கு செல்ல கூடாது என ரகசியமாக பலதடைகளை ஏற்படுத்தி உள்ளார். ஏன் அப்படி என பார்த்தால் அவரின் திட்டமே வேறாக இருந்திருக்கு. வைகோவிற்கு போக உள்ள ஒரு ராஜ்யசபா சீட்டில் டெல்லி செல்ல இருப்பவர் ஸ்டாலின் மருமகன் தானாம். அப்போது மத்திய அமைச்சராக ஆவதும் திட்டமாம். அங்கே மாறன் இருந்தால் அதற்கு சிக்கல் இருக்கும் என்பதால் தான் இந்த திட்டமாம். 

ஒருவழியாக நீண்டபோரட்டம் செய்து தனது உறவு பலத்தை பயன்படுத்தி சீட் வாங்கி விட்டார் செல்வி. மத்திய சென்னையில் தயாநிதி மாறன் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்யவே தயாநிதி ஆர்வம் காட்டவில்லை. தான் ஈடுபட்டு சீட் வாங்கி கொடுத்த காரணத்தால் செல்வியும் தனது சகோதரர் தமிழரசுவை அழைத்துக்கொண்டு தெரு தெருவாக  ஓட்டு கேட்டு தனியாக அலைந்து வருகின்றனர். 

மத்திய சென்னை, வேட்பளார் இவர் தான் என முடிவான பின்பும் தொகுதி மக்களை கண்டு ஆதரவு திரட்டமால் ஹாயாக ஓய்வு எடுக்கிறார் மத்திய சென்னை வேட்பளார், ஓய்வு எடுக்கவும் விடாது பிஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு  விசாரணை சிறை அளவில் அலைக்கழித்து கொண்டிருக்கிறது. விசாரணை நெருக்கடியால் தொகுதி பக்கமும் போக முடியமால் முடிங்கி போய் விட்டார்  சூரிய கட்சி வேட்பாளர் தயாநிதி மாறன். மத்திய சென்னை திமுக தொண்டர்களும் கலக்கத்தில் உள்ளனர் . கடந்த முறையே தோல்வியை தழுவினோம், இந்த முறையும் இவரையே நிறுத்தி வாக்கு சேகரிக்க  செல்ல வழிஇல்லாமல் முடக்கி விட்டதே தலைமை என முனங்கி கொண்டு உள்ளனர். முன் நின்று வாங்கி தந்த குற்றம் செல்வியோ பங்குனி வெயிலில் வாடி கொண்டு இருக்கிறார்.

கட்டுரையாளர் : சந்தனகவி 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central chennai dmk candidate


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->