காவிரி விவகாரம் மத்திய அரசு புதிய முடிவு! விழி பிதுங்க போகும் எடப்பாடி அரசு! - Seithipunal
Seithipunal


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அதற்கு பதிலாக வேறு ஒரு குழுவை உருவாக்க மத்திய அரசு  தயாராகி வருவதாக தெரிகிறது.காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த 9 பேர் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல் வந்துள்ளது. தமிழக அமைச்சர்கள் மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என்று குருட்டு தனமாக நம்பிக் கொண்டிருக்கிறாரகளோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. 

cauvery க்கான பட முடிவு

9  பேர் கொண்ட  குழுவில் 5  நிரந்தர உறுப்பினர்களும், 4 மாநில பிரதிநிதிகள் பகுதி நேர உறுப்பினர்களாகவும் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும்,  மாநில பிரதிநிதிகளை அந்தந்த மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 9 பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கான சட்ட மசோதா அடுத்த வாரம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

cauvery க்கான பட முடிவு

காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்துள்ள  அதிகாரங்கள் 9 பேர் கொண்ட குழுவுக்கு வழங்கப்படுவதற்கான சாத்தியமில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் கானல் நீராகவே போகிறது. தமிழக மக்கள் வழக்கம் போல தங்கள் வேலையை கவனிப்பார்களா? அல்லது பொங்கி வரும் காவிரிக்காக பொங்குவார்களா என்பது 29 ஆம் தேதிக்கு பிறகே தெரிய வரும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cauvery issue central govt take new decision


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->