பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு இன்று உறக்கம் இருக்காது! மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட இரு முக்கிய கட்சிகள்!! - Seithipunal
Seithipunal


வருகிற மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகிறது. தேசிய கட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. அடுத்து மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியா?, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது.  இதனிடையே, பாஜக, காங்கிரஸ் எதிர்த்து 3 ஆவது அணிக்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. 

உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால்  சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் தங்களது எதிர்காலம் குறித்து அச்சம் கொண்டன . இதனால், அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாடியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் உதவியை நாடினார். அவர் அதற்கு ஒப்புக்கொள்ள, இந்தக் கூட்டணிக்கு நல்ல பலன் கிடைத்தது. முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வரின் தொகுதிகளிலேயே பாஜக தோல்வியை தழுவியது. 

இதையடுத்து, வரும் மக்களவை தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளும் நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று பரவலாக பேசப்பட்டது.  மேலும், வருகிற மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி உத்தரப் பிரதேசத்தில் 50 இடங்களை பிடிக்கும், பாஜக கூட்டணி 28 இடங்களை பிடிக்கும் என்றும் ஓர் ஆய்வு கூறியது.

இந்நிலையில், பிஎஸ்பி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் கூட்டாக செய்தியாளர் சந்தித்தனர். இந்த சந்திப்பில் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிட்டனர்.  

2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக சமாஜ்வாதியுடன், பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாயாவதி வெளியிட்டார். 

மேலும், எங்களின் இந்த அறிவிப்பால் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்க போகிறது என்றனர் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BSP Mayawati and Samajwadi Party Akilesh Alliance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->