மோடியை விரட்டும், விடாது கருப்பு.!! தமிழகத்தை மிஞ்சிய அசாமியர்கள்.!!  - Seithipunal
Seithipunal


விடாது கருப்பு:

இந்திய நாட்டின் பிரதமர் மோடிக்கும், கருப்புக்கும் ஆகாது என்று சொல்லும் அளவிற்கு, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள், மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும் போதும் கருப்பு கொடி, கருப்பு பலூன் என்று போராட்டத்தில் இறங்கிவிடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக மதிமுக தலைவர் வைகோ மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதை தன் கடமையாக கொண்டுள்ளார். அது தன் கடமை என்று பேட்டியளித்துள்ளார். மோடி மட்டும் இந்த கருப்பு கொடிக்கு ஆளாகினாரா என்றால் இல்லை.

பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா விற்கு ஆந்திர மாநிலத்தில் கருப்பு கொடி காட்டியுள்ளனர். மேலும் தமிழக ஆளுநருக்கும் இந்த கருப்பு கொடிகள் காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இதே பாணியை பயன்படுத்தி அசாம் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி அங்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். இதற்கிடையே, அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகையை கண்டித்து மேலாடையின்றி போராட்டம் நடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு சில இடங்களில், பிரதமர் வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி, உருவ பொம்மை எரி‌ப்பு, கறுப்பு பலூன்கள் பறக்க விடுதல் உள்ளிட்ட போராட்டங்களும் அரங்கேறியுள்ளது. இதனால் அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாளை திருப்பூருக்கு வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படலாம் என்பதால் தமிழகத்திலும் பரபரப்பு தொற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BLACK FLAG AGAINST MODI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->