பாஜக வேட்பாளர் பட்டியல்.! தமிழிசை பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


17 வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக தலைமைகளில் அமைந்து உள்ள கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. 

நேற்று அதிமுக போட்டியிட உள்ள 20 மக்களவை தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் கூட்டணி கட்சியான பாமக தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மேலும் திமுகவும் 20 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

மக்களவை தேர்தலோடு நடைபெற உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் வேட்பாளர் பட்டியலை அதிமுக மற்றும் திமுக வெளியிட்டுள்ளது. அதேபோல் நேற்று காலை அமமுகவும், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. 

இன்று அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதேபோல் தேமுதிகவும் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. மேலும், அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள தஞ்சை தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை தொகுதியில் தமாகா வேட்பாளர் நடராஜன் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் வேட்பாளர் பட்டியல் இன்றே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் தெரிவிக்கையில், ''பாஜக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும்'' என்று தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ''கட்சி தலைமை என்னை எங்கு நிற்க சொல்கிறதோ அங்கு நிற்பேன்'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP TN LEADER PRESS MEET


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->