வெடித்தது சர்ச்சை : பிரபல நடிகர் அமர்ந்த இடத்தை கோமியத்தால் சுத்தம் செய்த பா.ஜ.கவினர்! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துக் கொண்ட ஒரு நிகழ்ச்சியின் அரங்கை கோமியம் கொண்டு பா.ஜ.க இளைஞர் அணியினர் சுத்தம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில தினங்களாகவே நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜ.க வை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் மத்திய அரசின் அமைச்சர்களையும், கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.கவின் நடவடிக்கையையும் பற்றி அவர் கூறும் ஒவ்வொரு கருத்துக்களும் பெரும் சர்ச்சையை உருவாக்கி வருகிறது.  

இந்நிலையில், சமீபத்தில் இடது சாரி அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துக் கொண்டுள்ளார். 

அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய  பிரகாஷ் ராஜ், உத்தர கன்னடா தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் ஹெக்டேவை பற்றி மிக கடுமையாக விமர்சித்துள்ளார். 

நடிகர் பிரகாஷ் ராஜின் இத்தகைய கருத்து மீண்டும் பா.ஜ.கவினஏ இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியானது கர்நாடக மாநிலம் சிர்சாவிலுள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. 

கடந்த பொங்கல் தினத்தன்று அந்த மண்டபத்திற்கு பா.ஜ.க இளைஞர் அணியான யுவ கேந்திராவை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். அங்கு அவர்கள் நடிகர் பிரகாஷ்ராஜ் அமர்ந்திருந்த அந்த மண்டபத்தின் அரங்கை நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு பின்னர் அதன் மேல் கோமியத்தை தெளித்துள்ளனர். 

இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், பா.ஜ.க தொண்டர்கள் சிர்சா நகரிலுள்ள நான் அமர்ந்த அரங்கை சுத்தம் செய்து கோமியம் தெளித்து புனிதப்படுத்தியுள்ளனர். நான் எங்கு சென்றாலும் இதே சுத்திகரிப்பை நீங்கள் செய்வீர்களா? என்று அவர் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp supporters clean the stage for cow urine


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->