தேர்தல் முடிவுக்கு முன்னே முதல்வருக்கு குவியும் ஆதரவு.! தோல்வி பயத்தில் பாஜக எடுத்த பகீர் முடிவு.!! - Seithipunal
Seithipunal


5 மாநிலங்களுக்குள் சட்டமன்ற வாக்குப்பதிவு இரு தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. வாக்கு பதிவுக்கு பிந்தைய கருது கணிப்பின் முடிவுகள் பாஜகவிர்ர்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தில் மீண்டும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி (டிஆர்எஸ்) ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு 5 முதல் 7 தொகுதிகள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், காங்கிரசுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு குறைவு என்றே கருத்து கணிப்புகள் வெளிவந்துள்ளன. 

அந்த கருத்து கணிப்புக்கு பின் அம்மாநிலத்தில் அரசியல் கூட்டணி திடீர் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 119 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் தேவை. கடந்தமுறை சந்திரசேகர ராவ் 90 தொகுதிகளில் அமோகமாக வெற்றிபெற்று முதல்வர் ஆனார்.

முதல்வர் சந்திரசேகர ராவ் தான் செய்த ஆட்சியின் நம்பிக்கையின் பேரிலேயே ஆட்சி முடியும் முன் ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்துள்ளார். அவரின் நமிப்பை வீண் போகவில்லை. ஆம் நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கும் இந்த நிலையில், தற்போதே அவர் மீண்டும் ஆட்சி அமைக்க, அவரை எதிர்த்து நின்ற பாஜக, தற்போது அவருக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. இதனை அம்மாநில பாஜக தலைவர் கே.லட்சுமண் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP SUPPORT TO TRS PARTY


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->