பாஜக கூட்டணி உறுதியானது.! அதிகாரப்பூர்வாமாக அறிவித்த முதலமைச்சர்.!! தொகுதிகளும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


வரும் 17 வைத்து மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் 9 அல்லது 10 கட்டங்களாக நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான அட்டவணை வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

வரும் தேர்தலின் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இந்நிலையில், இன்று  பாஜக-வின் தேசிய தலைவர் அமித் ஷா அவர்கள் இன்று மாலை மும்பை வந்தார். அங்குள்ள பன்ட்ரா பகுதியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு சென்ற அமித் ஷா, அவருடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றம் தேர்தலில் சிவசேனா-பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். 

மேலும் வரும் மக்களவை தேர்தலில் பாஜக 25 தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP SIVASENA ALLIANCE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->