பொளந்து கட்டும் கேரளா.. பொதுத்துறையை விற்று தேர்தல் நிதி திரட்டும் பாஜக - வெட்ட வெளியில் உடைக்கப்பட்ட இரகசியம்.! - Seithipunal
Seithipunal


பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலம் கிடைக்கும் கமிசனை பயன்படுத்தி தேர்தல் நிதி சேகரிக்க பாஜக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிக்கு எதிராக எல்டிஎப் திருவனந்தபுரம் மாவட்டக்குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், திருவனந்தபுரம் விமான நிலையம் மத்திய பொதுத்துறை நிறுவனமாக தொடர வேண்டும் என்பதே இடது ஜனநாயகமுன்னணியின் நிலைப்பாடு. எக்காரணம் கொண்டும் தனியார் மயமாக்கலை ஏற்க முடியாது.

மத்திய அரசு கைவிடுவதாக இருந்தால் மாநில அரசு ஏற்கத் தயாராக உள்ளது என்பதை கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசும் பொது ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது.

கோழிக்கோடு விமான நிலையத்தை விற்பதாக இருந்தாலும் ஏற்கத்தயார் என முதல்வர் அறிவித்துள்ளார். விமான நிலையங்களை நடத்தி அனுபவமுள்ள மாநிலம் கேரளமாகும். கொச்சி சர்வதேச விமானநிலையம் லாபத்தில் செயல்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு தேவையான இடம் முழுமையாக கையகப்படுத்தி வழங்கியது மாநில அரசாகும். விமான நிலையம் தொடங்கியது திருவிதாங்கூர் மகாராஜாவாகும். இம்மி அளவுகூட மத்திய அரசோ விமானநிலைய அதிகாரசபையோ  இதில் சம்பந்தப்படவில்லை.

இந்த நிலத்தை அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் தாரைவார்க்கும் முயற்சி நடக்கிறது. இந்த இடத்தை எந்த ஒரு தனியார் நிறுவனமும் கைப்பற்ற அனுமதிக்க முடியாது.எப்போது விமானநிலையத்தை மத்திய அரசு கைவிடுவதாக இருந்தாலும் மாநில அரசுடன் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும் என்பது ஒப்பந்தமாகும்.

இந்தவிமான நிலையத்தை விற்று பெரும் தொகை கமிஷன் பெறலாம் என பாஜக கருத வேண்டாம். மத்திய பொதுத்துறை நிறுவனங்களை முழுமையாக விற்பனை செய்யும் பாஜக அரசு எதிர்காலத்தில் நாட்டையே விற்க மாட்டார்கள் என்பதற்கு யாரால் உறுதிகூற முடியும்' என கொடியேரி கேள்வி எழுப்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp sale whole country cpm says


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->